Skip to main content

Posts

“க்ராம்ய வார்தா நா கஹிபே” உலகம் பொருள் பற்றிய செய்திகளை தேவையின்றிப் பேசக்கூடாது.

  ஒரு கழுதையும், புலியும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தன. வழியில் பச்சைப் பசேல் என்று புல் வெளியைப் பார்த்த கழுதை, “ஆஹா, நீல நிறத்தில் இந்தப் புல்வெளி எத்தனை அழகாக இருக்கிறது” என்றது. அதிர்ச்சியடைந்த புலி, “என்ன உளறுகிறாய்?, பச்சை நிறத்திலிருக்கும் புல்லைப் பார்த்து நீலம் என்று சொல்கிறாயே” என்று கேட்டது. “உளறுவது நீயா அல்லது நானா? புல் நீல நிறம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றது கழுதை. புலி, கழுதைக்கிடையே, வாக்குவாதம் தடிக்க, இரண்டும் காட்டின் ராஜா சிங்கத்திடம் சென்று தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதென முடிவு செய்தன. சிங்கத்தின் சிம்மாசனத்தை அடைந்த கழுதை பெருத்த குரலில், “அரசே, புல்லின் நிறம் நீலம் என்பதுதானே சரி” என்று கேட்டது. “உன் மனதிற்கு புல் நீல நிறமாகத் தோன்றினால், அது நீல நிறம்தான்” என்றது சிங்கம். “சிங்கராஜா, புல் நீல நிறம் என்பதை புலி ஒத்துக்கொள்ள மறுக்கிறது. புல்லின் நிறம் பச்சை என்று தேவையற்ற வாதம் செய்கிறது. உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிற புலிக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. “புலி காட்டை மூன்று முறை சுற்றி வர வேண்டும்” என்று சிங்க ரா...

மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது எனவே . . .

ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம் உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம் மொழிபெயர்ப்பு அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான் . ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ , இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது . உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும் . இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது . ஒ , மன்னனே ! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக . இதனைச் செய்வாயாக . பொருளுரை மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது . மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய் , அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது . எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . படிப்படியாக மனம் ஆத...