பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல் ஆதாரம் - கர்க சம்ஹிதை வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தேவரிஷி ஶ்ரீ நாரதர் மற்றும் பஹூலாஸ்வ மன்னருக்கும் (ஜனக மஹராஜனுக்கும் ) நிகழ்ந்த உரையாடல். ஶ்ரீ நாரதர் கூறினார். மன்னா ஒரு நாள் முனிவர்களில் சிறந்தவரான துர்வாசர் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனை தரிசிப்பதற்காக விரஜ மண்டலத்திற்கு வந்தார். அவர் மகாவனத்திற்கு அருகே புனிதமான காளிந்தி நதி (யமுனை நதி) கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை கண்டார். கோபால கிருஷ்ணன் சிறுவர்களுடன் அங்கு புரள்வது , மல்யுத்தம் செய்வதும், சிறுவர்களுக்கே உரியதான பாலலீலைகள் செய்து மனதைக் கொள்ளைக் கொள்பவராக திகழ்ந்தார். அவரது அங்கம் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. அவரது சுருண்ட கருங்குழல் சோபையுற்றது. நிர்வாணமாக சிறுவர்களுடன் ஓடிய பகவான் ஶ்ரீ ஹரியைக் கண்ட துர்வாசரின் மனதில் மிகுந்த வியப்பு உண்டாயிற்று. இவன் ஆறு வகை ஐஸ்வர்யங்களால் (அழகு, அறிவு, செல்வம்,வலிமை, புகழ், துறவு) முழுவதும் நிரம்பிய அதே ஈஸ்வரனா ? அப்படியானால் இவன் சிறுவர்களோடு ஏன் மண்ணில் புரண்டு கொண்டிருக்கிறான் ? என் பார்வையில் இவன் ந...