Skip to main content

ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பொக்கிஷமாவர்.


 ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பொக்கிஷமாவர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒருமுறை ஸ்ரீமதி ராதாரணியும் பகவான் கிருஷ்ணரும் மற்ற சகிகளுடன் நீராடிக்கொண்டிருந்தனர். நீராடி முடித்தவுடன், அவர்கள் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் அங்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். அவர், "எனக்கு திருமண வயதில் ஒரு புதல்வி இருக்கிறாள். என்னிடம் பணம் இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஆகையால் எனக்கு பண உதவி செய்யுங்கள்", என்று கேட்டார்.

இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், " ஸ்ரீமதி ராதா தான் என்னிடம் உள்ள செல்வங்களில் சிறந்தவர். ஆகையால் என்னுடைய சொத்தான அவரை எடுத்துக்கொள்ளுங்கள் ", என்று பதிலளித்தார். இதை கேட்ட பிராமணர் தன் தலையில் அடித்துக்கொண்டு, "என்னுடைய ஒரு புதல்விக்கே திருமணம் செய்ய முடியாமல் நான் தவிக்கின்றேன். நீங்கள் செல்வத்திற்கு பதிலாக இன்னொரு புதல்வியை தருகிறேன் என்று கூறுகிறீர்கள்", என்று கூறினார்.

இதை கேட்ட கிருஷ்ணர், நிலைமை புரிந்து கொண்டு, ஸ்ரீமதி ராதாராணியை தராசின் ஒரு பக்கம் அமர வைத்து, மறுபக்கம் அவரின் எடைக்கு சமமான தங்கத்தை வைத்து, அந்த தங்கத்தை பிராமணருக்கு வழங்கினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த பிராமணர் தன்னுடைய புதல்வியின் திருமணத்தை மிகவும் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடத்தி முடித்தார்.

நீதி:
🍁🍁🍁🍁


ஸ்ரீமதி ராதாராணி ஒரு பொக்கிஷமாவர். ஒருவர் மிகுந்த புண்ணியம் செய்திருந்தால் தான் ஸ்ரீமதி ராதாராணியின் திருவடிகளில் சரணடைய முடியும்.

"ராதாராணி, பகவான் கிருஷ்ணரின் அந்தரங்க சக்தியாவார். ஒருவர் பகவான் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினால், முதலில் ஸ்ரீமதி ராதாராணியை தஞ்சமடைய வேண்டும். அப்போது ராதாராணி மிகவும் மகிழ்ச்சியடைந்து, பகவான் கிருஷ்ணரிடம், "இங்கே பாருங்கள் ஒரு பக்த்தர் உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார். அவர் என்னை விட சிறப்பாக சேவை செய்வார்", என்று பரிந்துரை செய்வார். நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் கூட, ஸ்ரீமதி ராதாரணியின் மூலமாக பகவான் கிருஷ்ணரை அடைய நினைத்தால், நீங்கள் நிச்சயம் ரட்சிக்கப்படுவீர்கள். ஆகையால் ஸ்ரீமதி ராதாராணியை வணங்குவதே நமது முதல் கடமை. ஒரு மலரை பகவான் கிருஷ்ணருக்கு நேரடியாக அர்பணிப்பதற்கு பதிலாக ஸ்ரீமதி ராதாராணியின் கரங்களில் தந்து, "ஸ்ரீமதி ராதாரணியே ! ஜெகன் மாதா! இந்த மலரை பாகவான் கிருஷ்ணரிடம் சேர்பிக்க உதவுங்கள் ", என்று கூறினீர்களென்றால், ஸ்ரீமதி ராதாராணி மிகவும் மகிழ்ந்து, "ஓ! பகவானுக்காக மலர்களை கொண்டு வந்துள்ளீர்கள்", என்று ஏற்றுக்கொள்வார். (பத்ரம் புஷ்பம் பலம் தோயம் - பகவத் கீதை 9 .26 ) . பகவான் கிருஷ்ணருக்கு நேரடியாக அர்ப்பணிக்க கூடாது. ராதாராணியின் மூலமாக அர்பணித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவர்".

புஷ்பாஞ்சலி செய்த பின்னர், "ஸ்ரீமதி ராதாராணி, என்னை பற்றி உங்கள் கிருஷ்ணரிடம் கூறுங்கள். கிருஷ்ணர் உங்களுடையவர். "ராதா - கிருஷ்ணர்". கிருஷ்ணர் என்பவர் தனித்திருப்பவர் அல்ல. கிருஷ்ணர் ராதாராணியின் சொத்து. ஆகையால் கிருஷ்ணரை ராதாராணியின் மூலமாக அணுக வேண்டும்".

( ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசம், லண்டன் செப்டம்பர் 5


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...