கோபீ சந்தனத்தின் மகிமை ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15 🍁🍁🍁🍁🍁🍁🍁 நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் . மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான் அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்பட...