Skip to main content

Posts

ரண்சோர் ராய்

 ரண்சோர் ராய்  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம்  கார்க்கியன்   என்பவனை சால்வன், " கோழை என்றும் பேடி என்றும்  சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப்  பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,''  என்று தவத்தில் ஈடுபட்டான். அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  மீது பகை கொண்டு மதுராவை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக  படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, அங்கிருந்து  புறப்பட்டார். நாரதர் மூலம்...

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.

  சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல. யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஷ்ரத்தயார்சிதும் இச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாம் ஏவ விததாம்-யஹம் மொழிபெயர்ப்பு எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன். பொருளுரை கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், எல்லாருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றுள்ள பகவான் அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, ஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம்....

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் ஊர் திருவிழாவில் அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு மேல் பறந்துச் சென்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் சமைத்து வைத்திருந்த உணவில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை அந்தணர்களுக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர்கள் உயிர் துறந்தார்கள். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார். கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.? கழுகிற்கா? பாம்பிற்கா? அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத்...