Skip to main content

Posts

காஞ்சி அபிஜன்

 காஞ்சி அபிஜன் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்பு ஒரு காலத்தில் புருஷோத்தம தேவர் என்ற ஓர் அரசர் இருந்தார். இவர் கோங்கா வம்சத்தைச் சேர்ந்தவர். ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தவர். இவர் ஜெகந்நாதரின் பரமபக்தர். ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்ரையின் போது இந்த அரசர் பகவான் ஜெகந்நாதரின் திருப்திக்காக, ரதத்திற்கு முன் தெருவைக் கூட்டுவார். அவர் பகவானை எல்லாவற்றுக்கும் உரிமையாளராகவும், அந்த நாட்டின் உண்மையான அரசனாகவும் நினைத்து, தன்னை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாக எண்ணிக் கொண்டார். ஒரு சமயம் அரசர் தென்னாட்டில் காஞ்சி நகரத்திற்கு  விஜயம் செய்தார்.  அவ்விடத்தில் தனது கூடாரத்தை, தலை நகரத்திலுள்ள மிகவும் ரம்மியமான ஓர் தோட்டத்தில் அமைத்தார். அங்கே, மன்னர் புருஷோத்தம தேவர்  காஞ்சி இளவரசி பத்மாவதியை சந்தித்தார்  இருவர்கிடையில் கருத்து ஒருமித்து காதலிக்கலானார்கள். இவர்களது விருப்பம் அறிந்த காஞ்சி அரசன் , மனமகிழ்ந்து  மன்னர் புருஷோத்தமரை  அரண்மனைக்கு அழைத்து விவாகம் குறித்து பேசி தீர்மானம் செய்தார்கள். மன்னர் புருஷோத்தம தேவரும்  திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் . பின்னர் ஒரிசாவுக்குத் திரு...

புலன்களைக் கட்டுப்படுத்த சுலபமான, ஒரே வழி பகவானின் தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவது மட்டுமே

  புலன்களைக் கட்டுப்படுத்த சுலபமான, ஒரே வழி பகவானின் தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவது மட்டுமே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 புலன்கள் உடலின் சுறுசுறுப்பான பகுதிகள் அவற்றின் செயல்களை நிறுத்த முடியாது . செயற்கை முறைகளில் புலன்களின் செயல்களை நிறுத்த முயல்வது , விஸ்வாமித்ர முனிவரைப் போன்ற பெரும் யோகிகளின் விஷயத்திலும் கூட , பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது . விஸ்வாமித்ர முனி யோக சமாதியினால் புலன்களை அடக்கினார் . ஆனால் ஸ்வர்கலோக மங்கையான மேனகையை சந்திக்க நேர்ந்தபொழுது , அவர் உடலுறவுக்கு அடிமையானார் . செயற்கையான அவரது புலனடக்கம் தோல்வியடைந்தது . ஆனால் தூய பக்தர்களின் விஷயத்தில் , புலன்கள் அவற்றின் செயல்களிலிருந்து செயற்கையான முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன . புலன்களை அதிக கவர்ச்சியுள்ள செயல்களில் ஈடுபடுத்தும் பொழுது , தாழ்ந்த செயல்களால் அவை கவரப்படுவதற்கு வாய்ப்பில்லை . புலன்களை உயர்ந்த ஈடுபாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று கீதை கூறுகிறது . புலன்களை தூய்மைப்படுத்துதல் அல்லது அவற்றை பகவானின் த...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

  கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக-மஹேஷ்வரம் அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே மொழிபெயர்ப்பு ************************ எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். பொருளுரை *************** ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை