உபாக்யானே உபதேசம் ( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் அதோ திருடன்!! ஒரு காலத்தில் ஒரு கிராமம் தொடர்ந்து திருட்டுகளால் பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் எச்சரிக்கும் போதெல்லாம், திருடன் ஓடிவிடுவான். மக்களால் ஒரு கூக்குரல் எழுப்பப்படும், அப்போது மக்கள் அனைவரும் ஒன்று சேருவர். ஆனால் திருடன் ஓடிவிடுவதால், ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வர். இறுதியாக, கிராமத்தலைவர் திருட்டில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனித்தனியாக அழைத்து நம்பிக்கையுடன் விசாரித்தார். விசாரணையின் மூலம், ஒரு குறிப்பிட்ட நபர் அந்த கூட்டத்திற்கு வருவதையும், ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்தபோது திருடனைக் கண்டுபிடிக்க அந்த நபர் பதற்றமாகவும், ஆர்வமாகவும் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். இந்தச் சம்பவத்தால் கிராமத் தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அன்று நள்ளிரவில் இருந்து சந்தேகப்படும் அந்த குறிப்பிட்ட நபரை அவரது வீட்டில் கண்காணித்து அவரது நட...