Skip to main content

Posts

 

ஸ்ரீ கிருஷ்ணர்

 

ஜடவுலக்கத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் என்ன வித்தியாசம் ?

 

வர்ணாசிரம அமைப்பின் நோக்கம்

 

வர்ணாசிரம அமைப்பின் நோக்கம்

 

வேத சடங்குகளை விட ஹரி நாம சங்கீர்த்தனம் முக்கியமானது.

  பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும் அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும்.  பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள், ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும், இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக் கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம் ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள், குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக...

யார் அந்தணர்கள் ?

பகவான் எப்பொழுதும் அந்தணர்களிடத்தும், பசுக்களினிடத்தும் மிகுந்த கருணையுடையவராக இருக்கிறார். ஆகையினாலேயே கோ ப்ராஹ்மண ஹிதாய ச என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவான முழுமுதற் கடவுள் அந்தணர்களினால் வழிபடப்படும் தெய்வம் ஆவார். வேத இலக்கியங்களில் குறிப்பாக ரிக் வேதத்தின் மந்திரங்கள் உண்மையான அந்தணர்கள் எப்பொழுதும் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளையே நோக்குகின்றனர் என்று கூறுகின்றன; ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் முழுமுதற் கடவுளின் விஷ்ணு வடிவத்தினையே அதாவது கிருஷ்ணர், ராமர் மற்றும் விஷ்ணு அம்சங்களையே வழிபடுகின்றனர். அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு அந்தணனின் செயல்கள் வைணவர்களுக்கு எதிரானதாக இருந்ததென்றால் அவன் அந்தணனாகக் கருதப்படமாட்டான். ஏனென்றால் அந்தணன் என்றால் வைணவன் என்றும் வைணவன் என்றால் அந்தணன் என்றே பொருளாகும். பகவானுக்குப் பக்தனான ஒருவனும் அந்தணனே ஆவான். ப்ரஹ்ம ஜானாதி ப்ராஹ்மண: என்பது சூத்திரம். பிரம்மத்தை உணர்ந்தவன் அந்தணன் (பிராம்மணன்) ஆவான். அதுபோல் முழுமுதற் கடவுளை உணர்ந்தவன் வைணவன் ஆகிறான். பிரம்மத்தை உணர்வதென்பது ம...