Skip to main content

Posts

பௌதீக உலகத்தில் இன்பமும் துன்பமும்

  இந்த உலகில் , எல்லாரும் உலகியல் இன்பம் பெற முயற்சி செய்கின்றனர் , ஆனால் நமக்குச் சிறிதளவு ஜடவுலக இன்பம் கிடைத்தவுடன் , அதனோடு துன்பமும் உள்ளது . இந்த ஜடவுலகில் ஒருவர் கலப்படமில்லாத இன்பம் பெற முடியாது . ஒருவரிடம் இருக்கும் எந்த வித இன்பமும் , துன்பத்தாலும் மாசுபடுத்தப்பட்டது . சான்றாக , நாம் பாலைக் குடிக்க விரும்பினால் பின்னர் ஒரு பசுவைப் பாதுகாத்து , அது பால் தரத் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும் . பால் குடித்தல் மிகவும் நல்லது ; அது இன்பம் ஆனதும் ஆகும் . ஆனால் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பல தொல்லைகளை ஏற்க வேண்டும் . பகவானால் இங்கு குறிப்பிடப்பட்டதுபோல , யோக முறை இவ்வுலக இன்பத்தையும் , இவ்வுலகின் துன்பத்தையும் போக்கவே உள்ளது . கிருஷ்ணரால் பகவத் கீதையில் கற்பிக்கப்பட்டதுபோல , சிறந்த யோகம் பக்தி யோகம் ஆகும் . ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும் , ஜடவுலக இன்பம் அல்லது துன்பத்தால் தொல்லை அடைதல் கூடாது என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது . ஜடவுலக இன்பத்தால் ...

சாஸ்திர விதிகளின் முக்கியத்துவம்

  ய : ஷா ஸ்த்ர – விதி ம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம – காரத : ந ஸ ஸித் தி ம் அவாப்னோதி ந ஸுக ம் ந பராம் க திம் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன் , பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை . பொருளுரை : முன்பே விவரிக்கப்பட்டபடி , சாஸ்திரங்களின் விதிகள் மனித சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நிலைகளுக்கும் கொடுக்கப் பட்டுள்ளன . ஒவ்வொருவரும் இந்த சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றனர் . இவற்றைப் பின்பற்றாமல் தனது மனம்போன போக்கில் காமம் , கோபம் , மற்றும் பேராசையின்படி ஒருவன் செயல்பட்டால் , அவன் தனது வாழ்வில் என்றுமே பக்குவமடைய முடியாது . வேறு விதமாகக் கூறினால் , ஒரு மனிதன் இவ்வெல்லா விஷயங்களையும் கொள்கையளவில் அறிந்தவனாக இருந்தாலும் , தனது சொந்த வாழ்வில் இவற்றை ஈடுபடுத்தாத வரை அவன் மனித இனத்தின் கடைநிலையைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகின்றான் . மனித வாழ்வில் உள்ள உயிர்வாழி , வாழ்வை உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற...