Skip to main content

Posts

அர்த்தமற்ற பேச்சு

  விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தாதும் ஈஷா - பதே ‘ முயா விமோஹிதா விகத்தந்தே மமாஹம் இதி துர்திய : மொழிபெயர்ப்பு பகவானின் மாயா சக்தி , தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால் , அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை . ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள் , “ நான் ”, “ எனது ” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர் . பொருளுரை முழுமுதற் கடவுளின் வெல்லுதற்கரியதும் , சக்தி வாய்ந்ததுமான மாயா சக்தியால் அல்லது அறியாமையைப் பிரதிநிதிக்கும் தாழ்ந்த சக்தியால் , உயிரோட்டம் கொண்ட அகில உலகையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட முடியும் . இருப்பினும் பரமபுருஷரின் எதிரே நிற்பதற்குரிய போதுமான வலிமை அதற்கு இல்லை . அறியைமை முழுமுதற் கடவுளின் பின்புறத்தில் உள்ளது . அங்கு ஜீவராசிகளைத் தவறான வழியால் திருப்புவதற்குப் போதுமான வலிமையை அது பெற்றிருக்கிறது . அர்த்தமற்ற பேச்சைப் பேசுவதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவர்களுக்குரிய முக்கிய அறிகுறியாகும் . அர்த்தமற்ற பேச்சுக்கள் வேத இலக்கியங்கள...

பக்தி தொண்டின் மகிமை

  பரம புருஷ பகவான் , மிகவும் தூய்மையானவரும் , மேலானவரும் , பரம சக்தியமுமாவார் என்று பகவத் கீதை கூறுகிறது . அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை . இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது . குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது . காமத்திலிருந்தும் , பேராசையிலிருந்தும் விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும் . அதாவது , புலனின்ப ஆசைகளிலிருந்தும் , புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும் . எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது , சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும் . தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும் . ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும் . இதனால் அவர் பகவானை அங்கு நே...