ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்ய ஸாரூப்யைகத்வமப்யுத தீயமானம் ந க்ருஹ்ருணந்தி வினா மத்ஸேவனம் ஜனா : மொழிபெயர்ப்பு ஒரு தூய பக்தர் — ஸாலோக்யம் , ஸார்ஷ்டி ஸாமீப்யம் , ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட , இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் . பொருளுரை தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார் . சிக்ஷாஷ்டகத்தில் , அவர் பகவானிடம் வேண்டுகிறார் : “ ஓ பகவானே , நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ , ஒரு அழகிய மனைவியைப் பெறவோ , என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை , உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும் ” என்பதாகும் . பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது . பகவான் சைதன்...