க்ரோதா த் ப வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி–விப் ரம: ஸ்ம்ருதி–ப் ரம்ஷா த் பு த் தி –நாஷோ பு த் தி –நாஷா த் ப்ரணஷ் யதி கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான். பொருளுரை: ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டி யுள்ளார்: ப்ராபஞ்சிகதயா பு த் த் யா ஹரி–ஸம்ப ந்தி –வஸ்துன: முமுக்ஷுபி: பரித்யாகோ வைராக் யம் ப ல்கு கத் யதே (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258) கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன், அனைத்துப் பொருள்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், ஜடப் பொருள்களை தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர்; அதன் விளைவாக, பௌதிக பந்தத்திலிருந்து அவர்கள் முக்தி பெற விரும்பினாலும், துறவின் பக்குவநிலையை அவர்கள் அடையவில்லை. அதே சமயம், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தன், எல்லாப் பொருள்களையும் இறைவனின் தொண்டில் எப்படி உபயோகப்படுத்துவது என...