Skip to main content

உண்மையான வைரம்


 

உண்மையான வைரம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு வணிகர் நல்ல ஒட்டகம் ஒன்றை சந்தையில் வாங்க விரும்பினார். ஒட்டகத்தை பார்த்ததும் அதை விற்க வந்தவரிடம் அதன் விலையை பேசி முடிக்க ஆரம்பித்தார்.


வணிகருக்கும்,ஒட்டகம் விற்பனையாளருக்கு இடையில் நடந்த நீண்ட பேரம் பேசுதலுக்குப் பிறகு ஒருவழியாக ஒட்டகத்தை வாங்கி அதைத் தன் வீட்டிற்கு ஓட்டி வந்தார்.


வீட்டை அடைந்ததும் தன் வேலைக்காரனிடம் ஒட்டகத்தின்   சேனத்தை எடுக்குமாறு கூறினார்.


வேலைக்காரன் சேனத்தின்  அடியில் பளபளக்கும்   பை ஒன்று இருப்பதையும் அதனுள் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் நிறைந்து இருப்பதையும் கண்டான்.


அவன் தன் முதலாளியிடம் சத்தமாக, "முதலாளி ஐயா, நீங்கள் ஒட்டகம் தானே வாங்கினீர்கள், ஆனால் இங்கு பாருங்கள் அதனுடன் இலவசமாக என்ன வந்திருக்கிறது என்று". என்றான்.


 வணிகரும் வேலைக்காரனின் கையில் இருந்த அந்த வைரங்கள் சூரிய ஒளியிலும் பளபளப்புடன் பிரகாசிப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.


பின் வணிகர் கூறினார், "நான் ஒட்டகத்தை தான் வாங்கினேன், வைரத்தை அல்ல, எனவே இதை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்"என்றார்.


வேலைக்காரன் தன் மனதினுள் நம் முதலாளி எவ்வளவு முட்டாளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.


 அவன் கூறினான், இதன் உரிமையாளர் யார் என்று யாருக்கும் தெரியாது என்றான். ஆனால் வணிகர் இதற்கு செவி சாய்க்கவில்லை. அவர் உடனடியாக சந்தைக்குப் போய் அந்த பையை ஒட்டக வியாபாரியிடம் திருப்பி கொடுத்தார்.


ஒட்டக வியாபாரி மகிழ்வுடன், நான் இதனை சேனையின் அடியில் மறைத்து வைத்திருந்ததை மறந்து போய்விட்டேன் மிக்க நன்றி இதில் ஏதாவது ஒரு வைரத்தை வெகுமதியாக நீங்கள் தேர்வு செய்யலாம்  என்றார்.


அதற்கு அந்த வணிகர் நான் ஒட்டகத்திற்கு சரியான விலை கொடுத்து வாங்கியுள்ளேன். அதனால் எனக்கு எந்த பரிசுப் பொருளும் தேவையில்லை என்றார்.


 வணிகர் மறுக்க மறுக்க ஒட்டக வியாபாரியோ வற்புறுத்திக் கொண்டேஇருந்தார். கடைசியாக அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், உண்மையைச் சொன்னால் இந்தப் பையைத் தூக்கிக் கொண்டு வர முடிவு செய்த போது மிக அருமையான இரண்டு வைரங்களை ஏற்கனவே நான் எடுத்து வைத்துள்ளேன். 


அவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட ஒட்டக வியாபாரி கோபமடைந்து பையிலிருந்த வைரங்களை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கினார்.


பிறகு ஒரு பெருமூச்சுடன் என்னுடைய வைரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன. எனவே நீங்கள்  வைத்து  இருப்பவையாக கூறியவை எவற்றை? என்றார்.


வணிகர் கூறினார், "என் நேர்மை மற்றும் என் சுயமரியாதை" என்றார். 


ஒட்டக விற்பனையாளர் ஊமை ஆனார்.


அவர் கூறிய இந்த இரண்டு வைரங்களில் ஏதேனும் ஒன்று நம்மிடம் உள்ளதா என்று நமக்குள்ளே நாம் தேடிப் பார்க்க வேண்டும். 


எவர் ஒருவர் இரண்டு  வைரங்களான நேர்மை மற்றும் சுயமரியாதையை  கொண்டிருக்கிறார்களோ அவரே  இவ்வுலகின் மிக பெரிய செல்வந்தர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...