Skip to main content

பகவான் பலராமருடன் ரேவதியின் திருமணம்.


 பகவான் பலராமருடன் ரேவதியின்  திருமணம்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


கிருதயுகத்தில் ( சத்தியயுகத்தில்) ரேவதன் எனும் அரசன் துவாரவதீ எனும் கடல் சார்ந்த பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு குழந்தைகள். அவர்களில் மூத்தவன் தான் ககுத்மி. ககுத்மிக்கு ரேவதி என்ற மகள் இருந்தாள்.பேரழகியான அவள் எல்லா வித திறமை மற்றும் நற்குணங்கள் பெற்றிருந்தாள். அவளை ககுத்மி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். அவளது அறிவுக்கும், திறமைக்கும் , நற்குணங்களுக்கு நிகராக அந்த காலகட்டத்தில் எவரும் இல்லை. 


பூமிக்கும், தேவலோகத்திற்கும்  நேரடியாக செல்லும் சக்தியை வைவஸ்தவ மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தினுடைய கிருத யுகத்தில் பிறந்தவர்கள் படைத்திருந்தனர்.  ககுத்மி தனது செல்ல மகளை தகுதிவாய்ந்த ஒருவருக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு எல்லா திசைகளிலும் தேடினார். ஆனால் தனது மகளுக்கு ஏற்ற ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  எனவே ககுத்மி, தன்னுடைய மகள் ரேவதிக்கு சரியான மணாளன் யார் என்று அறிந்து கொள்வதற்காக பிரம்மலோகம் சென்றார். உடன் மகள் ரேவதியையும் அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் பிரம்மா தியானத்தில் இருந்ததால், அவர்கள் பிரம்மலோகத்தில் 20 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது. பிரம்மலோகத்தில் 20 நிமிடம் என்பது, பூலோகத்தில் பல யுகங்களுக்கு சமமாகும். அதன்படி பூலோகத்தில் வைவஸ்தவ மன்வந்தரத்தின் 28-வது மகா யுகத்தில் துவாபர யுகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது பிரம்ம தேவர் தவம் முடிந்து வந்ததும் ககுத்மி தனது மனக்குறையை பிரம்மாவிடம் தெரிவித்தார். பிரம்ம தேவர் அவரிடம், நீங்கள் இங்கு வந்து காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன. இப்போது பூலோகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்   அவதரித்து லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பகவான் பலராமர் உங்கள் மகளுக்கு ஏற்றவர்.அதனால் நீங்கள்  இப்போது பூலோக சென்று அங்கு பலராமரை அணுகி உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் என்றார்.


அவர்கள் பூலோகம் வந்தபோது, மனித இனம் பெருமளவில் மாற்றம் அடைந்திருந்தது. மற்ற மனிதர்களுடன் ஒப்பிடுகையில் ககுத்மியும் ரேவதியும் மிகப்பெரிய உருவத்தில் காட்சியளித்தனர். ககுத்மி பலராமரை அணுகி நடந்தவை அணைத்தும் கூறினார். மேலும் தனது பிரியமான மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் நோக்கம் அறிந்த பகவான் பலராமர் திருமணத்திக்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் பலராமர் ரேவதியின் தோளில் தனது கலப்பையை வைத்து  இழுத்ததும் அவர் அந்த காலகட்டத்திற்கு ஏற்ற மனித உருவத்திற்கு மாறினாள். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...