Skip to main content

Posts

Showing posts from July, 2021

நித்தியமாக பகவானின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம்

பரம புருஷ பகவானால் (விஷ்ணு அல்லது கிருஷ்ணர்) தமது சொந்த ஆயுதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆயுதம்(சுதர்சன சக்கரம்), பிரம்மாஸ்திரம் அல்லது அதற்கொப்பான பிற ஆயுதங்களையோ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அக்னிதேவன் இந்த ஆயுதத்தை அளித்தார் என்று வேத இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பகவான் இந்த ஆயுதத்தை நித்தியமாக தமது கையில் ஏந்தியிருக்கிறார். ருக்ம மகாராஜன் ருக்மினியை பகவானுக்கு அளித்த அதே முறையில்தான் அக்னிதேவனும் இந்த ஆயுதத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். இத்தகைய அன்பளிப்புக்களை பகவான் தமது பக்தர்களிடமிருந்து ஏற்றுக்கொள்கிறார். அந்த அன்பளிப்புகள் நித்தியமாக அவருக்குச் சொந்தமானவை என்றாலும் அவற்றை அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்கிறார். மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் இந்த ஆயுதத்தைப் பற்றிய விரிவான விளக்கம் ஒன்றுள்ளது. தன்னுடன் போட்டியிட்ட சிசுபாலனைக் கொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஆயுதத்தை உபயோகித்தார். இந்த ஆயுதத்தினால் சால்வனையும் கூட அவர் கொன்றார். மேலும் சில சமயங்களில், நண்பனான அர்ஜுனனுடைய எதிரிகளை அர்ஜுனன் கொல்வதற்கு அதை உபயோகிக்க வேண்டுமென்று பகவான் விரு...

கோபத்தை கையாலும் முறை

  துருவ மன்னர் ஒர் முக்தியடைந்த ஆத்மா, ஆதலின் அவர் யாரிடத்தும் சினங்கொள்வதில்லை. ஆயினும் அவர் ஒர்நாட்டை ஆளும் மன்னராதலின் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவர் சில நேரம் ஆத்திரமடைவது அவரது கடமையாகிறது. எந்தவிதக் குற்றமும் செய்யாத அவர் சகோதரன் உத்தமன் ஓர் யக்ஷனால் கொல்லப்பட்டான். அதனால் அக்குற்றவாளியைக் கொல்வது (உயிருக்குப்பதில் உயிர்) துருவரின் கடமையாகிறது. ஏனெனில் அவர் ஓர் அரசர். போட்டி என்று வந்தவுடன் துருவ மன்னர் தீவிரமாகப் போராடி யக்ஷர்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்தார். ஆனால் சினமானது நாம் அதிகப்படுத்தினால் அது அளவின்றி அதிகமாகும் தன்மை உடையதாகும். துருவரின் ஆத்திரம் கரை மீறாத வண்ணம் அவர் தாத்தா மனுவினால் அன்புடன் அமைதிப்படுத்தப்பட்டார். துருவரும் தனது தாத்தாவின் எண்ணம் என்ன என்பதைப்புரிந்து கொண்டதினால் போரை உடனே நிறுத்தினார். சுலோகத்திலுள்ள "ஸ்ருதேன பூயஸா" அதாவது "தொடர்ந்து கேட்பதினால்" என்றும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். பக்தித் தொண்டைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டிற்குத் தீங்கிழைக்கும் ஆத்திரத்தினை அடக்குதல் கூடும். ஸ்ரீல பரீக...

சஞ்சலமான நிலையை (மனோ வேகம்) எவ்வாறு கட்டுப்படுத்துவது?

  சஞ்சலமான நிலையை  (மனோ வேகம்) எவ்வாறு கட்டுப்படுத்துவது? ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் மனதைப் பதிக்கும் போது அதன் அமைதியற்ற அல்லது சஞ்சலமான நிலை (மனோ வேகம்) கட்டுப்படுத்தப்படுகிறது. சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய 22.31.) பின்வருமாறு கூறுகின்றது. கிருஷ்ண-ஸூர்ய–ஸம; மாயா ஹய அந்தகார யாஹான் கிருஷ்ண, தாஹான் நாஹி மாயார அதிகார கிருஷ்ணர் சூரியனுக்கு ஒப்பானவர், மாயை இருளுக்கு ஒப்பானது. சூரியன் பிரசாகிக்கும் போது அங்கு இருளுக்கு இடமில்லை. அதைப்போலவே, மனதில் கிருஷ்ணர் இருக்கும்போது, மாயையின் வசீகரத்தால் மனம் குழப்பமடைவதற்குச் சாத்தியமில்லை. எல்லா ஜடச் சிந்தனைகளையும் இல்லாமல் செய்துவிடும் யோக முறையானது உதவி செய்யாது. மனதை சூன்யமாக ஆக்கிக் கொள்ள முயல்வது செயற்கையானதாகும். சூன்யம் நிலைத்திருக்காது. ஆனால் கிருஷ்ணருக்கு எப்படி சிறந்த முறையில் தொண்டு செய்வது என்று எப்போழுதும் கிருஷ்ண உணர்விலேயே ஒருவர் ஈடுபட்டு இருப்பாராயின், இயற்கையாகவே ஒருவரது மனது கட்டுப்படுத்தப்படுகின்றது. - (உபதேசாமிருதம்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹ...

நான்கு விதமான பக்தியின் தளம்

  நான்கு விதமான பக்தியின் தளம் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பக்தியில் பல நிலைகள் உள்ளன என்றால் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் பக்தி பல தளங்களில் உள்ளது என்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும்.  அது என்னென்ன தளங்கள் என்றும் அதில் நாம் எங்கு உள்ளோம், எந்த தளத்தினை அடைந்தால் அது தூய பக்தி நிலை என்றும் இப்பொழுது பார்க்கலாம். பக்தி மொத்தம் நான்கு தளங்களில் உள்ளது, அவை: புலன்களின் தளம், மனதின் தளம், புத்தியின் தளம் மற்றும் ஆன்மீகத் தளம்.  இதனை விவரமாக அலசுவோம். புலன்களின் தளத்தில் பக்தி 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ஆரம்ப நிலையில் கடவுளிடம் மிதமான நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள்.  தங்களின் புலன்களின் திருப்திக்காக பகவானிடம் வேண்டுகோளை வைத்தபடியே இருப்பவர்கள்.  இறைவன் (அல்லது நமக்கு மேலே உள்ள ஒரு சக்தி) இருப்பதை ஒப்புக்கொள்பவர்கள் இவர்கள்.  நாத்திகர்களை விட இவர்கள் கொஞ்சம் முன்னேறியவர்கள் என்றாலும், இவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதே. தங்களது அன்றாட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், தங்களது எதிர்காலத்தை வளமாக்கவும், தங்களின் சந்ததியினர் அனைத்துவிதமான நலன்களையும் பலன்களையும் பெறவேண்டும் என்றும்...

பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன்

  (1 ) பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன் நாஹீ மாகி தேஹ - சுக வித்யா தன ஜன் மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 பகவானே, நான் பின்வரும் இந்த பிரார்த்தனையை, தங்களின் புனித பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். நான் உடலின்பத்தை பெறுவதற்காகவோ, படிப்பதற்காகவோ, செல்வங்கள் சேர்பதற்காகவோ அல்லது சீடர்களை சேர்பதற்காகவோ ப்ரார்திக்கவில்லை. (2 ) நாஹீ மாகி ஸ்வர்க, ஆர மோக்ஷ நாஹீ மாகி  நா கோரி பிரார்த்தன கோனோ விபுதிர லாகி மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 நான் ஸ்வர்கலோகங்களை அடைவதற்காகவோ, முக்தி பெறுவதற்காகவோ இந்த பிரார்த்தனை செய்யவில்லை. (3) நிஜ-கர்ம-குண- தோசே ஜெ ஜெ ஜென்ம பாய்  ஜன்மே ஜன்மே ஜெனோ தவ நாம-குண காய்   மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 நான் எப்படி பிறந்தாலும், என் கர்மா என்னை எப்படி அழைத்து சென்றாலும், நான் தங்களுடைய புனித நாமத்தை ஒவ்வொரு பிறப்பிலும் பாடிக்கொண்டே இருக்கவேண்டும். (4) ஏ மாத்ரா ஆசா மம தோமார் சரணே  அஹோய்துகி பக்தி ஹ்ரிதே ஜாகே அனுக்ஷனே மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 இது ஒன்றே என்னுடைய விருப்பம், என்னுடைய நம்பிக்கை மற்றும் என்னுடைய பிரார்த்தனையாகும் . தடையில்லாத எல்லையற்ற பக்த...

ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி

  ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி  🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் வசித்தவரான வேங்கட பட்டரின் மகனாவார். கோபால பட்டர் முன்பு இராமானுஜ ஸம்பிரதாயத்தின் சீடப் பரம்பரையைச் சார்ந்திருந்தார், ஆனால் பின்னர் கௌடீய ஸம்பிரதாயத்தின் அங்கமானார். 1433 சகாப்த ஆண்டில் (கி.பி. 1511), சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சாதுர்மாஸ்ய காலத்தின் நான்கு மாதங்களில் வேங்கட பட்டரின் இல்லத்தில் தங்கினார். அச்சமயத்தில் வேங்கட பட்டர் பூரண மனநிறைவை அடையும் வரை மஹாபிரபுவிற்கு சேவை செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது மஹாபிரபுவிற்குத் தொண்டு புரியும் வாய்ப்பினை கோபால பட்டரும் பெற்றார். காலப்போக்கில் ஸ்ரீ கோபால பட்ட கோஸ்வாமி தனது சித்தப்பாவும் மாபெரும் சந்நியாசியுமான பிரபோதானந்த சரஸ்வதியினால் தீக்ஷையளிக்கப்பட்டார். கோபால பட்ட கோஸ்வாமியின் தாய்தந்தை இருவருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தங்களது முழு வாழ்வையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சேவையில் அர்ப்பணித்தனர். அவர்கள் கோபால பட்ட கோஸ்வாமியை விருந்தாவனத்திற்குச் செல்ல அனுமதித்தனர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை நினைத்தபடியே...

பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்

  பகவத் கீதையினால் தன்னுணர்வு பெற முடியும் என்றால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? என்னும் கேள்வி இயற்கையாக எழலாம். பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்குகின்றது: 1) எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இறைவன் (ஈஸ்வரன்), 2) உயிர்வாழிகள் (ஜீவன்), 3) ஜட இயற்கை (பிரக்ருதி), 4) ஜட இயற்கை தோன்றி மறைவதைக் குறிக்கும் காலம் (காலம்), 5) ஜீவன்களின் செயல் (கர்மா). ஈஸ்வரன் 💐💐💐💐💐💐 எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இவர், கிருஷ்ணர், பரமாத்மா, அல்லது பிரம்மன் என்று அறியப்படுகிறார். ஜீவன்களும் ஜட இயற்கையும் இவருக்குக் கீழ்படிந்த சக்திகளே. இவரது ஆணையின் கீழ்தான் ஜட இயற்கை செயல்படுகிறது. இயற்கைக்குப் பின்னால் இறைவன் இருப்பதை அறியாதவர்கள், மோட்டார் வாகனத்திற்குப் பின்னால் ஓட்டுநர் இருப்பதை அறியாத குழந்தையைப் போன்றவர்கள். அந்த இறைவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே, பரம்பொருளை அருவப் பிரம்மனாக அல்லது பரமாத்மாவாக உணர்வதைக் காட்டிலும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணராக உணர்தலே சிறந்தது. குன்றிய அறிவுடையவர்களே பரம் பொருள் அருவமானது என்று கருது கின்றனர். ஜட ...

ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு

  ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ஸ்ரீ-பகவான் உவாச இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத் மொழிபெயர்ப்பு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர். பொருளுரை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பகவத் கீதை, சூரிய கிரகத்திலிருந்து தொடங்கி, அனைத்து கிரகங்களின் மன்னர்களுக்கும் பன்நெடுஞ்காலத்திற்கு முன்பே உபதேசிக்கப்பட்டது என்ற சரித்திரத்தை இங்கு நாம் காண்கிறோம். எல்லா கிரகங்களின் மன்னர்களும் குடிமக்களைக் காக்க வேண்டியவர்கள்; எனவே, மக்களை ஆள்வதற்காகவும் அவர்களை காமம் என்னும் பௌதிக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், அரசு குலத்தோர் அனைவரும் பகவத் கீதையின் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வது அவசியம். முழுமுதற் கடவுளுடன் நித்திய உறவை வளர்க்கக் கூடிய ஆன்மீக ஞானத்தைப் பயில்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மேலும், எல்லா கிரகங்களிலும் எல்லா ந...