Skip to main content

Posts

Showing posts from February, 2023

நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி

  நரசிம்மபள்ளி அல்லது தேவபள்ளி 🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ நவத்வீப தாம் மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் தேவபள்ளி என்ற மிகவும் சக்திவாய்ந்த இடத்தை பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் ஸ்ரீவாச தாகூரருடன் சுவர்ண விஹாருக்கு சென்றபிறகு பகவான் நித்தியானந்தர் நரசிம்மபள்ளி என்னும் கிராமத்திற்கு முன்னேறிச் சென்றார். இந்த இடத்தை நரசிம்மபள்ளி என்றும்  தேவபள்ளி என்றும் அழைப்பார்கள்.  சத்ய யுக காலத்திலிருந்தே பகவான் நரசிம்மதேவருக்கென்று பிரத்தியேகமான ஒரு ஆலயம் இந்த கிராமத்தில் இருக்கிறது என்பதை பகவான் ஶ்ரீ நித்யானந்தர், விளக்கினார். தன்னுடைய பிரியமான பக்தனான பிரகலாதனின் மீது கொண்ட பெரும் கருணையால் , பிரஹலாதருக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுத்து வந்த அவனுடைய தந்தையான ஹிரண்யகசிபுவை பகவான் நரசிம்மர் வதம் செய்த பின்னர் இந்த இடத்திற்கு ஓய்வெடுக்க வருகிறார் என்பதை அறிந்த பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அந்த இடத்தில் தங்களுக்குத் தேவையான இல்லங்களை அமைத்து ஒரு கிராமத்தையே உருவாக்கினார். மந்தாகினி நதியில் கரையோரமாக இருக்கும் சிறு குன்றின் மீது தங்களுடைய இல்லங்களை அமைத்து பகவானின்...

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல்

கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல் 🔆🔆🔆🔆🔆🔆 நவத்வீப-தாம-மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் பகவான் நித்தியானந்தர் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமிக்கு கூறியது: மத்திய த்வீபத்தின் தென்திசையில் கோமதி நதி உள்ளது. இந்த நதியின் கரையோரமாக நைமிசாரண்யம் அமைந்துள்ளது. கலியுகத்தின் ஆதிக்கத்திலிருந்து ஜீவன்களை பாதுகாக்க சௌனக ரிஷி தலைமையிலான பலரும் சூத கோஸ்வாமியின் திருவாயிலிருந்து கெளர பாகவதத்தை கேட்பதற்காக அங்கே கூடியிருந்தனர்.  கார்த்திகை (தாமோதர) மாதத்தின் போது எவரொருவர் இங்கு அமர்ந்து புராணங்களை படிக்கிறாரோ அவர் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு கௌரங்கருக்கு சேவை செய்வதன் மூலம் வ்ரஜ தாமத்தை சுலபமாக அடைந்து விடும் வாய்ப்பை பெறலாம். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் கௌரங்கரின் புகழைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்து அதனைக் கேட்க வேண்டுமென்று பகவான் சிவன் விருப்பம் கொண்டார். தன்னுடைய வாகனமான காளையின் மீது அமர்ந்து கயிலாயத்திலிருந்து இந்த இடத்திற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் சென்று கௌர கதையை கேட்க தான் இன்னும் வேகமாகச் செல்ல வேண்...

சீமந்தத்வீபம்

  சீமந்தத்வீபம் 🔆🔆🔆🔆🔆 “ஸத்ய-யுகத்தில் ஒருசமயம் சிவபெருமான், கௌராங்கரின் நாமத்தை உச்சரித்தபடி பயங்கரமாக நடனமாடத் தொடங்கினார். அவரிடம் பார்வதிதேவி வினவினாள். 'தயவுசெய்து கௌரங்கர் யார்? என்று எனக்குக் கூறுங்கள்; தங்களின் ஆச்சரியமான நடனத்தைக் கண்டும், கௌரங்கரின் நாமத்தைக் கேட்டும் எனது இதயம் உருகுகிறது. இதுவரை, இந்த மந்திர-தந்திரங்களின் வழியில் நான் கேட்டவை அனைத்தும் இவ்வுயிர்வாழிகளுக்கு இன்னும் நெருக்கமான பந்தத்திற்கே வழிகாட்டுகின்றன. அன்புள்ள பிரபுவே, கௌராங்கரைப் பற்றிய விஷயங்களைக் கூறுங்கள். அவரை வழிபடுவதின்மூலம் நான் உண்மையான வாழ்வை அடைய இயலுமா?' மஹாதேவன் கூறினார். “இராதையின் முழுமை பகுதியும், அனைத்து ஆற்றல்களும் சக்தியும் (ஆதி சக்தி) நீயேயாவாய், ஒரு ரகசியமான உண்மையை இப்போது உனக்குக் கூறுகிறேன். இராதாராணியின்  மனோபாவத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மாயாப்பூரில் சச்சி தேவியின் கருவிலிருந்து கௌரங்க என்ற பெயர் கொண்டு பிறக்கவிருக்கிறார். நாம சங்கீர்த்தனம் அதாவது பகவானுடைய புனித நாமங்கள் ஜபம் செய்வதில் பகவான் கௌரங்கர் பித்துப் பிடித்தவனைப் போல காணப்படுவார். தகுதிய...

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூர்

 ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூர் 🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ சைதன்ய பாகவதத்தை இயற்றிய ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரர் மோதாத்ரும தத்தில் தீவீபத்தில் பிறந்தார். வேதவியாசரின் இந்த அவதாரமாகிய இவர் ஸ்ரீ நித்தியானந்த  பிரபுவின் சீடராவார். ஸ்ரீ கேசவ பாரதியின் வம்சாவளியைச் சேர்ந்த கோபிநாத  பிரம்மச்சாரி உள்ளிட்ட பல சீடர்கள் இருந்தனர். ஸ்ரீவாச பண்டிதரின் தங்கை மகளான நாராயணீ தேவியே ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரரின் தாயாவார். இவர் நான்கு வயது இருந்தபோது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கைகளிலிருந்து அவருடைய உத்திஸ்டையை பெற்றார். பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது அம்பிகா என்ற பெண் தன் பாலை அவருக்கு உண்பித்தார். கிலிம்பிகா என்று அம்பிகாவிற்கு ஒரு இளைய சகோதரி இருந்தார். கிலிம்பிகாவே நாராயணி என்று. கௌர-கனோதேச-தீபிகா என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. விருந்தாவன தாஸ தாக்கூரர் சைதன்ய பாகவதம் எழுதினார் மாலினி தேவி அவதரித்த இடம் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீவாச பண்டிதரின் பத்தினியான மாலினி தேவி பிறந்த இடம் இதுவேயாகும். விருந்தாவன தாஸ தாகூரர் பிறந்த இடத்திற்கு அருகே இருக்கிறது. பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்ற பிறகு ப...

மோதாத்ருமத்வீபம்

 மோதாத்ருமத்வீபம் 🔆🔆🔆🔆🔆🔆 இந்த தீவு தாஸ்யம், அல்லது சேவகம் எனும் பக்தி சேவையை பிரதிபலிக்கிறது. ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரருடைய புனித ஸ்தலம், வாசுதேவ தத்தரின் புனித ஸ்தலம், ஸ்ரீ  சாரங்க முராரியின் புனித ஸ்தலம் மற்றும் அர்க திலா ஆகிய இடங்கள் இந்த தீவில் நீங்கள் சென்று காணக்கூடிய இடங்களாகும். ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் தன்னுடைய நவத்வீப-பாவ -தரங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பீஷ்ம-திலாவில் பீஷ்மரிடமிருந்து ஆசி பெற்ற பிறகு அழுதுகொண்டே றநான் மோதாத்ரும த்வீபத்திற்கு செல்வேன். வ்ரஜ பூமியிலிருக்கும் பாந்திராவனத்திற்கும்  மோதாத்ரும த்வீபத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை . அங்கிருக்கும் அனைத்து மிருகங்களும் பறவைகளும் உன்னதமானவையாகும். ஸ்ரீ கௌர ஹரி  மற்றும் சீதா இராமருடைய புனித நாமங்களை, இங்கிருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றன. கருணையோடு நிழல் கொடுத்து அந்த  பகுதியையே அழகுபடுத்தி சூரியனை மறைத்திருக்கும்  பல ஆல மரங்கள் இந்த பாந்திராவனத்தில் இருக்கின்றன. மேலும் பகவான்  ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய லீலைகள் என் கண்கள...

சம்பாஹட்டி

  சம்பாஹட்டி 🔆🔆🔆🔆🔆🔆 தன்னுடைய நவத்வீப-பாவ-தரங்கத்தில்  ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "கோலத்வீபத்திற்கு வடக்கே சம்பாஹட்டி என்ற ஒரு இடமுள்ளது. நவத்வீபத்தின் எல்லா இடங்களிலும் இதுவே மிகவும் அழகான இடமாகும். சம்பாஹட்டா கிராமம் என்பது ஒரு உயர்ந்த தீர்த்தமாகும் மேலும் இங்கு கௌர கதாதரரை கவி. ஜெயதேவர் வழிபட்ட மிக அழகிய இடம். வாணிநாதருடைய இல்லத்தில் ஸ்ரீ சச்சி நந்தனர் தன் சகாக்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்தார். சம்பாஹட்டா எனும் கிராமத்தில் சம்பக மலர்கள் இருக்கும் ஒரு வனத்தில் தான் சம்பகலதா சகி பூக்களை பறிக்க வருவார். வ்ரஜ பூமியில் கிருஷ்ணரும் பலராமரும்  ஓய்வெடுத்த கதிரவனத்திற்க்கும்  நவத்வீபத்திலிருக்கும் இந்த இடத்திற்கும்  எந்த வேறுபாடுமில்லை." சம்பாஹட்டி என்று எதனால் இந்த இடம் அழைக்கப்படுகிறது? 🔆🔆🔆🔆🔆 பகவான் நித்யானந்தர் , ஸ்ரீஜீவ கோஸ்வாமி , ஸ்ரீவாச பண்டிதர் மற்றும் பல  பக்தர்களுடன்  நவத்வீப தாம பரிக்கிரமா செல்லும் பொழுது சம்பாஹட்டி எனும் கிராமத்தை அடைந்தனர். பகவான் கௌரங்கரின் மிக உயர்ந்த பக்தரான த்வஜ வாணிநாதருடைய இல்லத்தில...

ஶ்ரீ நவத்வீப தாமம்

 

ஶ்ரீ நவத்வீப தாமம்

 

ஶ்ரீ நவத்வீப தாமம்

 

ஶ்ரீ நவத்வீப தாமம்

 

ஶ்ரீ நவத்வீப தாமம்

 

ஶ்ரீ நவதீப் தாமம்

 

கிருஷ்ண பிரேமையை எவ்வாறு அடைய முடியும்

 

கிருஷ்ண பிரேமையை எவ்வாறு அடைய முடியும்

 

ஶ்ரீ நவத்வீப தாமின் தோற்றம்

    . பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்    எப்போதெல்லாம்  அவதரிக்கிறாரோ அப்போதெல்லாம், அவரது புனித ஸ்தலம், தீர்த்தங்கள், பிரியமான நண்பர்கள். நித்யமான சேவகர்கள் மற்றும் அவரது உபகரணங்களும் அவருடன்  அவதரிக்கின்றனர், பகவானின் நித்ய வாசஸ்தலத்திலிருந்து அவரது லீலைகளில் பங்குகொள்ள அவதரிப்பதால் இந்த ஸ்தலங்களில் எவ்வித பேதங்களும் இல்லை. அதனால் இவ்விடம்  புனிதமான "தாமமாக"( புண்ணிய ஸ்தலமாக) கருதப்படுகிறது.      பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்காகவும், அவரை கவர்ந்து இழுக்கவும் ஶ்ரீமதி ராதா ராணி தனிப்பட்ட முறையில் தனது பிரேமையால் உருவாக்கிய மிகவும் அற்புதமான  ஸ்தலம் இந்த நவதீபம்      சிவபெருமான் பார்வதிக்கு நவத்வீப-தாமத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் போது இந்த அற்புதமான லீலைகளை விவரித்தார். "தாமரை மலரில் தேனீ எப்படி விளையாடிக் கொண்டு இருக்குமோ அது போல" "கிருஷ்ணர் விருந்தாவனத்தின் இனிமையான காட்டுத் தோப்புகளில் விரஜா என்ற கோபியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார்.  சகி (தோழி) ஒருத்தி மூலம் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற , நிலவை  போன்ற ம...

பரமபுருஷரைத் துதிக்கும் முறையே கீர்த்தனம் எனப்படுகிறது,

  அஹம் ச காயம்ஸ் தத் - வித்வான் ஸ்த்ரீபி : பரிவ்ருதோ கத : ஞாத்வா விஸ்வ - ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட - ஸ்ரீ : க்ருத - ஹேலன : மொழிபெயர்ப்பு நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் : அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன் . நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன் . இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் ( சக்தி வாய்ந்த தேவர்கள் ), “ நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால் , அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய் ” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர் . பொருளுரை ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும் , அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் ( ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ :) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன . அதாவது , ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும் , அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும் , தேவர்களின் மகிமைகளை அல்ல . துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு ...