Skip to main content

Posts

Showing posts from September, 2024

யார் உண்மையில் பக்தன்

 

தூய பக்தர்களின் குணநலன்கள்

 

மிக உயர்ந்த சேவை பகவானின் பக்தர்களுக்கு சேவை செய்வதே

 

மஹாலய சடங்குகள்

 

ஸ்ரார்த்த சடங்குகளில் எதை நிவேதனம் செய்ய வேண்டும்

 

பித்ரு வ்ரதம் / கயா ஸ்ராத்தம்

பகவத் கீதையில் (9.25) “பித்ரூன் யாந்தி பித்ரு வ்ரதா:” என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நலத்தில் அக்கறை கொண்டவர்கள் “பித்ரு வ்ரதா:” என்று அழைக்கப்படுகின்றனர். பித்ரு லோகம் என்றொரு உலகம் இருக்கிறது. அதன் தலைவன் அர்யமான் ஆவான். அவனும் ஒரு தேவனைப் போன்றவன்தான். மேலும் அவனை திருப்திப்படுத்துவதின் மூலம் ஒருவன் பேய்களாய்த் திரியும் தனது குடும்ப உறுப்பினர்கள் பூத உடல் பெறுமாறு உதவலாம். தனது குடும்பத்திடமும், கிராமத்திடமும், நாட்டிடமும் மிகுந்த பற்றுக் கொண்டு, பாவமும் செய்தவர்கள் பஞ்சபூதங்களினாலான பூத உடலைப் பெறுவதில்லை. மாறாக மனம், புத்தி, ஆணவம் என்பவற்றினாலான நுண்ணுடலையே பெறுகின்றனர். இந்நுண்ணுடல்களில் இருப்பவர்களே பேய்கள் எனப்படுவர். இந்தப் பேய்களின் நிலை மிகவும் துன்பமானது, அவர்களிடம் மனம், புத்தி, ஆணவம் போன்றவை இருந்தும் பூதஉடல் இல்லாததினால் அவர்கள் பௌதீக இன்பங்களை விரும்பி தொல்லைகள் கொடுக்கின்றனர். அக்குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக மகன் அர்யமான் தேவன் அல்லது பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். காலங்காலமாகவே இந்தியாவில் ஒரு குடும்பத்தின் மூத்த மைந்தன் கயா என்ற ஊருக்குப...

ஸ்ராத்தம் (திவசம்) என்றால் என்ன ?

  ஸ்ராத்தம் என்பது வேதத்தைப் பின்பற்றுபவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கு முறையாகும் . இது ஓர் ஆண்டில் 15 நாட்கள் நடைபெறும் . அப்பொழுது சடங்கு முறைகளைச் செய்யும் மதவாதிகள் , பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்குப் படையல் கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர் . இவ்வாறு அந்த பிதாக்களும் முன்னோர்களும் , இயற்கையின் மாற்றங்களால் , ஜடவுலக இன்பம் அனுபவிக்க முழுமையான உடல் இல்லாத நிலையில் அவர்கள் சந்ததியினரால் தரப்படும் ஸ்ராத்தப் படையலினால் மீண்டும் அத்தகைய உடல்களைப் பெற முடியும் . ஸ்ராத்தம் அல்லது பிரசாதத்துடன் தரும் படையல் நிகழ்ச்சி இன்றும் இந்தியாவில் , சிறப்பாக கயா நகரில் இருக்கின்றது . அங்கு புகழ் வாய்ந்த கோயிலில் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் படையல் கொடுக்கப்படுகின்றது . இவ்வாறு பகவான் சந்ததிகளின் பக்தித் தொண்டினால் மகிழ்வதால் , அவருடைய அருளால் முழு உடலற்ற முன்னோர்களின் கண்டனத்துக்கு உரிய ஆன்மாக்களை விடுவிக்கிறார் . ஆன்மீக   முன்னேற்ற வளர்ச்சிக்காக , அவர்கள் மீண்டும் முழு உடலைப் பெறுவதற்கு உதவுகிறார் . ...

ஜய ராதா -மாதவ

 (ஜய) ராதா -மாதவ  (ஜய) குஞ்ஜ-பிஹாரீ (ஜய) கோபீ-ஜன-வல்லப  (ஜய) கி.பூரி-வர-தா ரீ  (ஜய) ஜஷோதா -நந்தன,  (ஜய) வ்ரஜ-ஜன-ரஞ்ஜன (ஜய) ஜா,முன-தீர-வன-சாரீ  கிருஷ்ணர் ராதையின் காதலர். அவர் விருந்தாவனப் புதர்களில் பல்வேறு சிருங்கார லீலைகளை வெளிப்படுத்துகிறார். அவர் விருந்தாவனத்தின் ஆயர்குல கன்னிப் பெண்களின் காதலராவார், கோவர்தனம் எனப்படும் மாபெரும் மலையை உயர்த்திப் பிடித்தவர்,அன்னை யசோதையின் அன்பிற்குரிய மகன், விரஜவாசிகளுக்கு மகிழ்ச்சியளிப்பவர், யமுனை நதிக்கரையின் காடுகளில் உலா வருபவர். (இந்தப் பாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பிடித்தமானதாகும், அவர் இதனை தம்முடைய சொற்பொழிவுகளுக்கு முன்பாகப் பாடுவது வழக்கம். அலகாபாத்திலும் கோரக்புரிலும் இப்பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடிய பின்னர், ஸ்ரீல பிரபுபாதர் ஸ்தம்பித்த நிலைக்குச் சென்றார். சிறிதுநேரம் கழித்து வெளிப்புற உணர்விற்குத் திரும்பியபோது, அவர் பக்தர்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடுமாறு கூறினார். "இந்தப் பாடல் விருந்தாவனத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது . ஸ்ரீமதி ராதாராணி, விருந்தாவனம், கோவர்தனம், யசோதை, ஆயர்குலச் சிற...

கோபியர்களின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 31 / பதம் 1-19 ************************************************************************* பதம் 1 கோப்ய ஊசு : ஜயதி தே ( அ ) திகம் ஜன்மா வ்ரஜ ஸ்ரயத இந்திரா ஸஸ்வத் அத்ர ஹி கயித் த்ருஸ்யதாம் திக்ஷு தவாகாஸ் த்வயி த்ருதாஸவஸ் த்வாம் விசின்வதே மொழிபெயர்ப்பு கோபியர்கள் கூறினர் : ஒ , அன்பிற்குரியவரே , விரஜத்தில் பிறந்ததினால் , உமது பிறப்பு அதன் புகழை அதிகரித்திருக்கின்றது . அதனால் அதிர்ஷ்ட தேவதையான இந்திரா எப்போதும் இங்கே வசிக்கின்றாள் . உமக்காகவே உமது பக்தியுள்ள பணிப்பெண்களாகிய நாங்கள் எங்கள் எல்லாவிடங்களிலும் தேடிக் கொண்டிருக்கின்றோம் , அருள் கூர்ந்து உம்மைக் காணும் மகிழ்வை எங்களுக்குத் தந்தருள்வீராக .   பதம் 2 ஸரத் - உதாஸயே ஸாது - ஜாத - ஸத் - ஸரஸிஜோதர - ஸ்ரீ - முஷா த்ருஸா ஸுரத - நாத தே ( அ ) ஸுல்க - தாஸிகா வர - த நிக்னதோ நேஹ வத : மொழிபெயர்ப்பு ஓ , காதல் தேவனே , அழகில் , உமது பார்வை சரத் காலத் தாமரைத் தடாகங்களில் மலர்ந்திருக்கும் எழில் மிகு தாமரை மலர்களின...