மச்ச அவதாரம் வழங்கியவர் :- ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பரமபுருஷ பகவான் தம்மை ‘ஸ்வாம்சம்’ எனப்படும் (அவரது சுய அம்சங்களாகவும்), ‘விபின்னாம்சம்’ எனப்படும் (ஜீவராசிகளாகவும்) விரிவடையச் செய்கிறார். பகவத் கீதையில் (4.8) கூறப்படுவதைப் போல், ‘பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்:’ பரமபுருஷ பகவான், சாதுக்கள், அல்லது பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்கள், அல்லது அசுரர்களை அழிக்கவும் இவ்வுலகில் தோன்றுகிறார். குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றும் வேத முறைப்படியுள்ள மதத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே அவர் அவதரிக்கிறார். இவ்வாறாக சிலசமயங்களில் ஒரு மீனாகவும், சிலசமயங்களில் ஒரு பன்றியாகவும், சிலசமயங்களில் நரசிம்ஹ தேவராகவும், சிலசமயங்களில் வாமன தேவராகவும், இன்னும் பல்வேறு உருவங்களில் அவர் தோன்றுகிறார். ஆனால் எத்தகைய உருவத்தில் அல்லது அவதாரத்தில் அவர் மூன்று இயற்கைக் குணங்களைக் கொண்ட இச்சூழ்நிலைகளின் வந்தாலும், அவர் பாதிப்படைவதில்லை. இது அவரது தெய்வீகமான ஆளும் சக்திக்குரிய ஒரூ அடையாளமாகும். அவர் பௌதிக சூழ்நிலைக்குள்...