Skip to main content

Posts

உண்மையான யோகப் பயிற்சி

  ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன: நாத்-யுச்சரிதம் நாதி-நீசம் சைலாஜின-குஷோத்தரம் தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரிய-க்ரிய: உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத் யோகம்-ஆத்ம-விஷுத்தயே மொழிபெயர்ப்பு ****************** யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும். பொருளுரை ****************** "புனிதமான இடம்" என்பது புண்ணிய யாத்திரைத் தலங்களைக் குறிக்கின்றது. இந்தியாவில் யோகிகள் அனைவரும் (ஆன்மீகர்களும் பக்தர்களும்) வீட்டை விட்டு வெளியேறி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் ஓடும் பிரயாகை, மதுரா, விருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை அடைந்து, தனிமையில் யோகத்தைப் பயில்கின்றனர். ஆனால் இஃது அனைவருக்கும் சாத்தியமானதல...

உணர்வே ஆத்மாவின் அறிகுறியாகும்

 

ஆத்மா

 

ஆத்மா

 

ஆத்மா

 

பிரலம்பாசுன் வதம்

  பிரலம்பாசுன் வதம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் லீலைகளை நிகழ்த்திக் கொண்டி ருந்த ஸ்ரீ விருந்தாவனத்தில் கோடைக் காலம் கூட வசந்த காலத்தின் தன்மைகளைக் கொண்டிருந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர்கள் அனைவரும் ஆட்டபாட்டங்களில் திளைத்திருந்தனர். அப்போது பிரலம்பன் என்னும் அசுரன் ஒரு ஆயர் குலச் சிறுவனைப் போல் தன்னை உருமாற்றிக் கொண்டு அவர்களுடன் கலந்து கொண்டான். எல்லாம் அறியவல்ல பகவான் கிருஷ்ணர் அவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனைக் கொல்வதற்காக, அவனுடன் நண்பனைப் போல் பழகினான் பிறகு கிருஷ்ணர், பலதேவரிடமும், ஆயர்குலச் சிறுவர்களிடமும் அவர்கள் அனைவரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாட வேண்டும் என்று கூறினார். அனைத்துச் சிறுவர்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் கிருஷ்ணரும், பலராமரும் தலைவர்களாக இருப்பது என்றும், தோற்ற பிரிவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது தோள்களில் சுமந்து செல்ல வேண்டு மென்றும் தீர்மானித்தனர். பலராமர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமனு...

பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை

 பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சாம்பன் திருமணம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஜாம்பவதியின் பிரிய மகனான சாம்பன், துரியோதனன் மகள் லக்ஷ்மணையை அவளது சுயம்வரக் கூட்டத்திலிருந்து எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலாக, கௌரவர்கள் கூட்டு சேர்ந்து அவரைச் சிறைபிடிக்க வந்தனர். தனியொருவராக கொஞ்சநேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தியபின், ஆறு கௌரவ வீரர்கள் அவரது தேரையும், வில்லையும் உடைத்து அவரைக் கைப்பற்றினர். பிறகு அவரையும் ல்ஷ்மணையையும் அஸ்தினாபுரத்திற்கு எடுத்துச் சென்றனர் சாம்பன் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்ட உக்ரசேன மன்னர் அவர்களைப் பழிவாங்க யாதவர்களை வரவழைத்தார் கோபங் கொண்ட அவர்கள் போருக்குத் தயாராயினர். ஆனால் குரு மற்றும் யது வம்சங்களுக்கிடையில் போர் மூள்வதைத் தடுக்க எண்ணி, பகவான் பலராமர் அவர்களை சமாதனப்படுத்தினார். பகவான் சில பிராமணர்களுடனும், யாதவ முதியோர்களுடன் அஸ்தினாபுரம் சென்றார் யாதவ குழுவினர் நகருக்கு வெளியில் கூடாரம் அமைத்துத் தங்கினர். திருதராஷ்டிரரின் எண்ணத்தை அறிந்துவர பலராமர் உத்தவரை அனுப்பினார். கௌரவ சபைக்குச் சென்ற உத்தவர்,...

பகவான் பலராமருடன் ரேவதியின் திருமணம்.

 பகவான் பலராமருடன் ரேவதியின்  திருமணம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருதயுகத்தில் ( சத்தியயுகத்தில்) ரேவதன் எனும் அரசன் துவாரவதீ எனும் கடல் சார்ந்த பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு குழந்தைகள். அவர்களில் மூத்தவன் தான் ககுத்மி. ககுத்மிக்கு ரேவதி என்ற மகள் இருந்தாள்.பேரழகியான அவள் எல்லா வித திறமை மற்றும் நற்குணங்கள் பெற்றிருந்தாள். அவளை ககுத்மி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். அவளது அறிவுக்கும், திறமைக்கும் , நற்குணங்களுக்கு நிகராக அந்த காலகட்டத்தில் எவரும் இல்லை.  பூமிக்கும், தேவலோகத்திற்கும்  நேரடியாக செல்லும் சக்தியை வைவஸ்தவ மன்வந்தரத்தின் முதல் மகாயுகத்தினுடைய கிருத யுகத்தில் பிறந்தவர்கள் படைத்திருந்தனர்.  ககுத்மி தனது செல்ல மகளை தகுதிவாய்ந்த ஒருவருக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டு எல்லா திசைகளிலும் தேடினார். ஆனால் தனது மகளுக்கு ஏற்ற ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  எனவே ககுத்மி, தன்னுடைய மகள் ரேவதிக்கு சரியான மணாளன் யார் என்று அறிந்து கொள்வதற்காக பிரம்மலோகம் சென்றார். உடன் மகள் ரேவதியையும் அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் பிரம்மா தியானத்தில் இருந்ததால்...

பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை

  பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யுதிஷ்டிர மஹராஜாவும் ஸ்வபஜா வால்மிகா என்ற ஸாதுவும்   ( இந்த கதையானது ஜைமினி ரிஷி எழுதிய மஹாபாரதத்தில் உள்ளதாகும்) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராஜஸுய யாகம் நிறைவடைந்த பிறகு மஹாராஜா யுதிஷ்டிரர் பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான தானங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரிடம் எனது சேவையில் அனைத்து பிராமணர்களும் வைஷ்ணவர்களும் திருப்தியடைந்தனரா என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்வது என்று வினவினார். அதற்கு கருணையுள்ள பகவான், அவருடைய சங்கை ஒரு இடத்தில் வைத்து பின் கூறினார். விருந்தினர் அனைவரும் திருப்தியடைந்தனர் என்றால் இந்த சங்கு தானாகவே முழங்கும் என்றார். மஹராஜா யுதிஷ்டிரர் எல்லா பிராமண மற்றும் வைஷ்ணவ விருந்தினர்களுக்கும் மிகுந்த அக்கறையுடன் சேவைகள் செய்தார். ஆனால் முடிவில் அந்த சங்கானது முழங்கவில்லை. இதனால் மன்னர் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை அறிய விரும்பி பகவான் கிருஷ்ணரின் உதவியை பணிவுடன் வேண்டினாார். அதற்கு பகவான், நகருக்கு அப்பால் ஸ்வபஜா வால்மிகா என்ற மிகவும் பணிவா...

அனந்தாழ்வாரின் "ராமானுஜ நந்தவனம்"

  அனந்தாழ்வாரின்  "ராமானுஜ நந்தவனம்" வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?" திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது. எப்படி..? திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தைத் தோண்ட, பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது.  திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வார்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனந்தாழ்வாரின் குருபக்தி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருவரங்கத்தில்...

வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?

  வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?  வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 காலமோ கலி காலம்! மக்களிடம் இருப்பதோ மடமை! கடவுளை சாமனியரைப் போல கருதுவோர் ஏராளம்! மஹாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துகளும் ஏக்கச்சக்கம்! அவற்றில் ஒன்று: வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தார் என்னும் கருத்தாகும். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒரு சாதாரண வேடனின் அம்பினால் மடிதல் சாத்தியமா? சற்று அலசிப் பார்ப்போம். இறைவன், ஆதி அந்தம் அற்றவர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருஷ்ணரின் மறைவைப் பற்றி நாம் விவாதிப்பதற்கு முன்பாக, கிருஷ்ணரின் தன்மைகளை சற்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். கிருஷ்ணர் என்பவர் ஒரு சாதாரண மனிதனோ, பல்வேறு கடவுள்களில் ஒருவரோ அல்ல. அவர் எல்லா காரணங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள், ஆதி அந்தம் அற்ற இறைவன்; மேலும், தனக்கு நிகராகவோ தன்னை விட உயர்ந்தவராகவோ யாரும் இல்லாத பெருமாள். இந்த உண்மை, கிருஷ்ணரின் மறைவினை எடுத்துரைக்கும் இரண்டு சாஸ்திரங்களிலும் (மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம்) தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் அனைத்து செயல்களும் தெய்...