நெருப்பானது , ஒன்றுமறியாத ஒரு குழந்தையால் கையாளப்பட்டாலோ அல்லது அதன் சக்திகளை நன்கறிந்த ஒருவனால் கையாளப்பட்டாலோ அது செயற்படவே செய்யும் . உதாரணமாக , காய்ந்த வைக்கோல் அல்லது புல் உள்ள ஒரு வயலில் , நெருப்பின் சக்தியை அறிந்த ஒரு முதியவர் தீ வைத்தாலோ அல்லது ஒன்று ம் மறியாத ஒரு குழந்தை தீ வைத்தாலோ அது எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம் . அதுபோலவே , ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமையை ஒருவன் அறிந்தோ அல்லது அறியாமலோ இருக்கக் கூடும் . ஆனால் அப்புனித நாமத்தை ஒருவன் ஜபித்தால் , எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவன் விடுபடுவான் . ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன் , அந்த மருந்தை உட்கொண்டால் , அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட , அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது . ஏனெனில் , அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா , தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல . அதுபோலவே , பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும் , அறிந்தோ , அறிய...