யாவல் லிங்கபன்விதேோ ஹி ஆத்மா தாவத் கர்ம - நிபந்தனம் தேதா விபர்யய: க்லே சோ மாயா - யோகோ ‘நுவர்த்ததே மொழிபெயர்ப்பு ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பந்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும். பொருளுரை ஜீவராசியானவன் மனம், புத்தி, பொய் அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் பந்திக்கப்படுகிறான். ஆகவே மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே அடுத்த உடலுக்குக் காரணமாகிறது. பகவத் கீதை (8.6) உறுதி செய்வதுபோல், யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜதி அந்தே கலேவரம். மரணத்தருவாயில் ஆத்மா வேறொரு வகையான உடலுக்கு மாறுவதற்கு மனமே அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. ஒரு ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, மனதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துவானாயின், அவனுடைய மனதால் அவனை இழிவு படுத்தமுடியாது. எனவே மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகு...