Skip to main content

Posts

ஸ்ரீ ராதிகாஷ்டகம்

  ஸ்ரீ ராதிகாஷ்டகம்  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 க்ருஷ்ணதாஸ் கவிராஜ் கோஸ்வாமியின் கோவிந்த லீலாம்ருதத்திலிருந்து  (நண்பகல் லீலைகள் அத் 17.59.-67 சாரி  என்ற பெண் கிளியால் பாடப்படுதல்,)  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🌼🌼🌼🌼🌼 குங்குமாக்த காஞ்சனாப்ஜ கர்வ ஹாரி கௌரபா பீத நாஞ்சிதாப்ஜ கந்த கீர்த்தி நிந்தி சௌரபா பல்லவேஸ ஸூனு ஸர்வ வாஞ்சிதார்த்த ஸாதிகா மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா மொழிபெயர்ப்பு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 அழகிய தங்கத்தாமரை மலரின் பெருமையை மங்கச் செய்யும்படியான உருக்கிய பொன்னிறமுடைய ஸ்ரீராதையின் வசீகரிக்கும் மேனியில் செந்நிற குங்குமம் பூசப்பட்டு புது வித அழகை வெளிப்படுத்துகின்றது. அவளது மேனியில் இருந்து வெளிப்படும் நறுமணமோ குங்குமப் பூவால் நிரப்பப்பட்ட தாமரைப் பூவின் வாசனையை மிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. ஆயர் குலத்தலைவரான நந்த மஹாராஜாவின் தவப்புதல்வரான க்ருஷ்ணரை சகல விதத்திலும் திருப்திபடுத்தக் கூடியவளாக ஸ்ரீராதா மிளிர்கின்றாள். பேரன்பு மிக்க ஸ்ரீராதிகா தனது தாமரைப்பாத சேவையை கருணையுடன் அடியேனுக்கும் தந்தருள்வாராக. பதம் 2 🌼🌼🌼🌼🌼 கௌரவிந்த காந்தி நிந்தி சித்ர பட்ட ஷ...
 
 

ஜீவராசிகளின் நிலையும்.மற்றும் பகவானின் கருணையும்

பௌதிகத்தில் ஆழ்ந்துள்ள ஜீவராசிகளின் துன்பத்திற்கான மூலகாரணம், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரம் மற்றும் அடையப்பட வேண்டிய முடிவான பூரணத்துவம் ஆகிய அனைத்தும் இப்பதத்தில் கூறப்பட்டுள்ளன. ஜீவராசி அவனுடைய இயற்கையான அமைப்புப்படி, சிறைப்பட்டுள்ள ஜட வாழ்விற்கு மேற்பட்டவனாவான். ஆனால் இப்போது அவன் பகிரங்க சக்தியினால் சிறைப்படுத்தப்பட்டு உள்ளான். இதனால் தன்னை அவன் ஜட சக்தியின் ஒரு விளைபொருள் என்று எண்ணிக் கொள்கிறான். புனிதமற்ற இத்தொடர்பினால், தூய ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன், ஜட இயற்கைக் குணங்களின் கீழ் பௌதிக துன்பங்களை அனுபவிக்கிறான். தான் பௌதிகத்தின் ஒரு விளைபொருள் என்று ஜீவராசி தன்னை தவறாக புரிந்துகொள்கிறான். தற்போது பௌதிக சூழ்நிலைகளின் கீழ் அவன் கொண்டுள்ள முறைகேடான எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவை அவனுக்கு இயற்கையானவை அல்ல என்பதையே இது குறிக்கிறது. ஜீவராசி அவனுடைய பந்தப்படாத நிலையில் சிந்தனை, விருப்பம் மற்றும் உணர்வு ஆகிய இயல்பான சக்திகளைக் கொண்டுள்ளான். பந்தப்பட்ட நிலையில் அவனது அறிவு அறியாமையால் மூடப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக ஜீவராசி, பூரண அருவ பிரம்மாவாக இருக்கிறான் என்ற தத்துவம்...

ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர்

  ஶ்ரீ ஜெகதீஷ பண்டிதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஜெகதீஷ பண்டிதரைப் பற்றிய விளக்கங்கள் சைதன்ய பாகவதம் ஆதி காண்டம், அத்தியாயம் ஆறு, மற்றும் சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை, அத்தியாயம் 14ல் காணப்படுகிறது. இவர் சாகதஹ இரயில் நிலையத்திற்கு அருகில் நதீயா மாவட்டத்திலுள்ள யஷடா என்னும் ஊரைச் சார்ந்தவர். அவரது தந்தையான கமலாக்ஷர், பட்ட நாராயணன் என்பவரின் மகனாவார். ஜெகதீஷருடைய தாய், தந்தையர் இருவரும் பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தர்களாவர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு ஜெகதீஷர், அவருடைய மனைவி துக்கினி, சகோதரர் மகேஷர் ஆகிய மூவரும் சொந்த ஊரைவிட்டு ஶ்ரீ மாயாபூருக்கு  வந்தனர். அங்கே ஶ்ரீ ஜகந்நாத மிஸ்ரர் மற்றும் இதர வைஷ்ணவர்களின் சங்கத்தில் அவர்கள் வாழ தொடங்கின்ர். சைதன்ய மகாபிரபு ஜெகதீஷரை ஜகந்நாத புரிக்குச் அழைத்துச் செல்லுமாறும் ஹரி நாம ஸங்கீர்த்தன இயக்கத்தை பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாத புரியிலிருந்து திரும்பிய பின்னர், பகவான் ஜகந்நாதரின் கட்டளைக்கிணங்க, அவர் யஷடா கிராமத்தில் ஜகந்நாதரின் விக்ரஹங்களை  பிரதிஷ்டை செய்தார். ஜெகதீஷ பண்டிதர் ஜகந்நாதரின் விக்ரகத்தினை யஷடா கிராமத்திற...
 

நாரத மகரிஷி

  நாரத மகரிஷி வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு காலத்தில் உபபர்ஹணா என்ற கந்தர்வர் ஒருவர் வாழ்ந்தார்.  அவர் ஒரு வைஷ்ணவ பக்தராவார்.  அவர் இசையில் தேர்ந்து விளங்கியதால் பகவானை போற்றிப் பாடுவதன் மூலம் சேவைகள் செய்து வந்தார்.  மேலும் உபபர்ஹணா பார்ப்பதற்கு மிக அழகாக விளங்கியதால் மற்ற கந்தர்வர்களின் மரியாதைக்கும் உரியவரானார். அதை அவர் மிக சந்தோஷமாக அனுபவித்தார்.  ஒருநாள் கந்தர்வர்களும் அப்சரஸ் களும் தேவர்களின்  சபைக்கு பிரஜாபதிகளால் அழைக்கப்பட்டிருந்தனர். பகவானின் மகிமைகளை போற்றிப்பாடுவதற்காகவும்,  நடனமாடவும் உபபர்ஹணா கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அங்கு குழுமியிருந்த சுவர்க்க லோக வாசிகளால் திசை திருப்பப்பட்ட உபபர்ஹணா அவர்களை சந்தோஷப்படுத்தும் பொருட்டு அவர்களைப் போற்றிப் பாட ஆரம்பித்தார்.  இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த பிரஜாபதிகள் தனது திறமையை துஷ்பிரயோகம் செய்த உபபர்ஹணாவை ஒரு சூத்திர குடும்பத்தில் பிறக்கும்படி சபித்தனர்.  இதனால் உபபர்ஹணா தனது அடுத்த பிறவியில் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தார். அதிர்ஷ்டவசமாக அவனுடைய தா...