ஸ்ரீ ராதிகாஷ்டகம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 க்ருஷ்ணதாஸ் கவிராஜ் கோஸ்வாமியின் கோவிந்த லீலாம்ருதத்திலிருந்து (நண்பகல் லீலைகள் அத் 17.59.-67 சாரி என்ற பெண் கிளியால் பாடப்படுதல்,) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🌼🌼🌼🌼🌼 குங்குமாக்த காஞ்சனாப்ஜ கர்வ ஹாரி கௌரபா பீத நாஞ்சிதாப்ஜ கந்த கீர்த்தி நிந்தி சௌரபா பல்லவேஸ ஸூனு ஸர்வ வாஞ்சிதார்த்த ஸாதிகா மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா மொழிபெயர்ப்பு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 அழகிய தங்கத்தாமரை மலரின் பெருமையை மங்கச் செய்யும்படியான உருக்கிய பொன்னிறமுடைய ஸ்ரீராதையின் வசீகரிக்கும் மேனியில் செந்நிற குங்குமம் பூசப்பட்டு புது வித அழகை வெளிப்படுத்துகின்றது. அவளது மேனியில் இருந்து வெளிப்படும் நறுமணமோ குங்குமப் பூவால் நிரப்பப்பட்ட தாமரைப் பூவின் வாசனையை மிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. ஆயர் குலத்தலைவரான நந்த மஹாராஜாவின் தவப்புதல்வரான க்ருஷ்ணரை சகல விதத்திலும் திருப்திபடுத்தக் கூடியவளாக ஸ்ரீராதா மிளிர்கின்றாள். பேரன்பு மிக்க ஸ்ரீராதிகா தனது தாமரைப்பாத சேவையை கருணையுடன் அடியேனுக்கும் தந்தருள்வாராக. பதம் 2 🌼🌼🌼🌼🌼 கௌரவிந்த காந்தி நிந்தி சித்ர பட்ட ஷ...