Skip to main content

Posts

அரிஷ்டாசுரன்

  விருந்தாவனம் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் ஆழ்ந்திருந்தது . எல்லோரும் அவரின் லீலைகளை எண்ணியபடிப் பரமானந்த சாகரத்தில் மூழ்கியிருந்தார்கள் . ஆனால் ஜடவுலகம் மாசுக்கள் நிரம்பியதாகையால் விருந்தாவனத்திலும் கூட அசுரர்கள் அமைதியைக் குலைக்க முற்பட்டார்கள் . அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து , குளம்புகளால் பூமியைக் கிளறியபடிக் குழப்பம் விளைவிக்கலானான் . பெரும் பூகம்பம் ஏற்பட்டதுபோல் நிலம் அதிர்ந்தது . அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறியபின் கிராமத்தினுள் நுழைந்தான் . அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாகவிருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும் , சினையுற்றிருந்த சில பசுக்களுக்கும் கர்ப்பச் சேதம் ஏற்பட்டது . எருதின் உடல் மிகப் பெரியதாகவும் , பலமுள்ளதாகவுமிருந்ததால் , மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்திருப்பதுபோல் அவனின் உடல் மேலும் ஒரு மேகம் சுற்றி வந்தது . அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண் , ப...

கோலோக விருந்தாவனத்தில் ராதா குண்டத்தின் தோற்றம்

  கோலோக விருந்தாவனத்தில்  ராதா குண்டத்தின் தோற்றம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் ராதா-குண்டம் மற்றும் சியாமா-குண்டம் எவ்வாறு ஆன்மீக உலகில் முதலில் தோன்றின என்பது பற்றி ஆதி-புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கோலோக விருந்தாவனத்தில்,  ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் ஒரு வனத்தில்  ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். கோபியர்கள் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர்.  ராதாராணியின் இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்த கிருஷ்ணர் திடீரென்று தீவிர அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கிருஷ்ணரின் உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் ராதாராணியின் மனநிலையைப் பெறத் தொடங்கினார். அந்த மனநிலையில் , இறைவன் கண்ணீரை வடித்து, கிருஷ்ணரின் பெயரை மீண்டும் மீண்டும் அழைக்கத் தொடங்கினார்; பின்னர் விரக்தியால், தன்னைத் தேடி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினார். கிருஷ்ணரை தன் சொந்த வடிவத்திலும் மனநிலையிலும் பார்த்து, அருகில் உள்ள காட்டில் மறைந்து சென்றதை பார்த்த ஸ்ரீமதி ராதாராணியும் தீவிர அன்பின் மனநிலையில் அதே வனத்திற்குள் நுழைந்தார். ராதாராணியுடைய உணர்வுகள...

கிருஷ்ண உணர்வில் பற்றுதல் மற்றும் துறவு

  உண்மையில், ஒரு ஜீவராசிக்குச் சொந்தமாக இருப்பது ஒன்றுமில்லை. ஆகவே எதையும் அவனால் துறக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு ஜீவராசி அதிக மதிப்புள்ள ஒன்றை அடைவதற்காக ஏதேனும் ஒன்றை துறக்கிறான். ஒரு மாணவன் சிறந்த கல்வியைப் பெறுவதற்காக குழந்தைத்தனமான விருப்பங்களை தியாகம் செய்கிறான். வேலைக்காரன் நல்ல வேலைக்காக சாதாரண வேலையைக் கைவிடுகிறான். அதைப் போலவே, உண்மையான ஆன்மீக மதிப்புள்ள ஒரு பொருளுக்காக பக்தரொருவர் ஜடவுலகைத் துறக்கிறார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி மற்றும் ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி முதலானவர்கள் பகவானின் தொண்டிற்காக ஆடம்பரத்தையும், செழிப்பையும் துறந்தனர். பௌதிக கணக்குப்படி அவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தவர்களாவர். கோஸ்வாமிகள் வங்காளதேசத்து அரசாங்கத்தில் மந்திரிகளாக இருந்தனர். மேலும் ரகுநாத தாஸ கோஸ்வாமி ஒரு பெரிய ஜமீன்தாரின் மகனாக இருந்தார். ஆனால் ஏற்கெனவே அவர்கள் பெற்றிருந்ததைவிட உயர்வான ஒன்றைப் பெறுவதற்காக அனைத்தையும் அவர்கள் துறந்தனர். பொதுவாக பக்தர்கள் பௌதிக செல்வங்களை அவ்வளவாகப் பெற்றிருப்பதில்லை. ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் மிகவும் இரகசியமான பொக்கிஷம் ஒன்றை அவர்...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கடவுள் இருக்கின்றாரா?

வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் *************************** கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்பதைக் காட்டிலும் கடவுள் இருக்கின்றார் என்பதற்கே சாட்சிகள் அதிகமாக உள்ளன. அதை நிரூபிப்பதற்கான சில தகவல்கள்: * இவ்வுலகில் எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, தேவைப்பட்டு இல்லாமல் இருப்பதும் ஏதுவும் இல்லை. உதாரணமாக, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் இருக்கின்றது, பலதரப்பட்ட உயிரினங்களின் பசியைத் தணிப்பதற்குப் பலதரப்பட்ட உணவு வகைகள் உள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால், இவற்றையெல்லாம் முறையாக நிர்வகிப்பவர் ஒருவர் இருப்பதை நிச்சயம் உணரலாம். * ஓர...

கடவுளை அறிவது எப்படி?

  வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ் ************************** அறிவைப் பெறுவதற்கு பொதுவாக மூன்று முக்கிய வழிகள் உள்ளன. (1) பிரத்யக்ஷ பிரமாணம்–புலன்களைக் கொண்டு நேரடியாக அடையப்படும் அறிவு (2) அனுமான பிரமாணம்–முந்தைய தகவல்களைக் கொண்டு யூகத்தின் மூலம் பெறப்படும் அறிவு (3) சப்த பிரமாணம்–அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்படும் அறிவு கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பிரத்யக்ஷ பிரமாணமும் அனுமான பிரமாணமும் பயன்தராதவை. சப்த பிரமாணத்தினால் மட்டுமே இறைவனை அறிய இயலும். பிரத்யக்ஷ பிரமாணம் ************************** நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால் எல்லாவற்றையும் காண இயலாது. அவற்றின் பார்வை அளவு 400 முதல் 700 மில்லிமைக்ரான். நமது காதுகள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்க்கு இடைப்பட்ட ஒலியலைகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்டவை. மேலும், நமது புலன்கள் மாயையின் வயப்படுபவை. அதாவது ஒன்றை மற்றொன்றாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. இவை நமக்கு முழுமையான ஞானத்தைத் தராது. எனவே, இறைவனை அடைவதற்கான...