ஆதர்சபுருஷர் இராமபிரான் (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஆதர்ச குணம்) 🍁🍁🍁🍁🍁🍁🍁 ரகுகுலத்திற்கு அணிகலமாக விளங்குபவரும் சிறந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரின் குணங்கள் மற்றும் பண்புகளின் எல்லையைக் காக்கும் பகவான் ஸ்ரீராமசந்திரனுக்கு ஒப்பானவராக வேறு ஒருவர் இதுவரை பிறந்ததில்லை என்று சொல்வது மிகையாகாது. 'இராமபிரான் பூரண பிரம்மமான பரமாத்மாவே. அவர் தர்மத்தைக் காக்கவும், உலகை உய்விக்கவுமே அவதரித்தார் எனினும் நன்னடத்தை கொண்ட ஓர் ஆதர்ச மனிதராகவே எல்லோரிடமும் நடந்து கொண்டார். ஆதர்சலீலைகள் கொண்ட அவருடைய சரித்திரத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும் இதயத்தில் மிகவும் தூய உணர்வு அலைகள் கிளர்ந்தெழுகின்றன. மனம் களிக்கிறது. அவருடைய ஒவ்வொரு செயலும் பிறர் பின்பற்றி நடக்கத்தக்கதாக இருந்தது. அவர் நற்குணங்களின் பெருங்கடல். படைக்கலங்களைப் பயன்படுத்தும் கலையில் அவர் உண்மை நல்லெண்ணம், தயவு,பொறுமை, மென்மை, வீரம், ஆழம், தேர்ச்சி, பராக்கிரமம், அச்சமின்மை, பணிவு, அமைதி, சகிப்புத்தன்மை, மனஅமைதி, அடக்கம், பற்றின்மை, நீதி காக்கும் தன்மை, திறமை, அன்பு, தியாகம், மரியாதை காத்தல், பிறன...