தந்தையிடம் பக்தி 🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ராமர் தனது தந்தையிடம் கொண்டிருந்த பக்தியும் மிகமிக அற்புதமானது. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில் ஸ்ரீராமரது மனத்தில் எவ்வளவு உற்சாகமும், துணிவும், திடமான உறுதியும் இருந்தது என்ற விஷயம் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது! தாயான கைகேயியிடம் ஸ்ரீராமன் சொல்வதை வால்மீகி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். அஹம் ஹி வசநாத் ராஜ்ஞ: பதேயமபி பாவகே பக்ஷயேயம் விஷம் தீஷ்ணம் பதேயமபி சார்ணவே | (வால்மீகி இராமாயணம் 2/18/28-29) ந ஹ்யதோ தர்மசரணம் கிஞ்சித ஸ்தி மஹத்தரம் யதா பிதரி ஸுஸ்ரூஷா தஸ்ய வா வசநக்ரியா (வால்மீகி இராமாயணம் 2/19/22) 'மன்னர் சொன்னால் நான் நெருப்பில் குதிப்பேன். கொடிய நஞ்சையும் உண்பேன். கடலிலும் விழுவேன். ஏனென்றால் தந்தைக்குப் பணிவிடை செய்வதையும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதையும் விடப் பெரிய தர்மம் உலகில் வேறு ஒன்றுமில்லை' என மொழிகிறார். அங்கே இதேபோன்ற மொழிகள் பல காணப்படுகின்றன. பிறகு அன்னை கௌசல்யா தேவியிடம் அவர் நாஸ்தி பக்தி: பிதுர்வாக்யம் ஸமதிக்ரமிதும் மம ப்ரஸாதயே த்வாம் ஸிரஸா கந்துமிச்சாம்யஹம் வநம் (...