Skip to main content

Posts

வேணு கீதை

 

வேணு கீதை

 

வேணு கீதை

 

ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும்

  முன்பு மனிதர்களால் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் சத்திய யுகத்திற்குப் பிறகு, வைஷ்ணவர்களுக்கிடையில் அவமரியாதையான நடவடிக்கைகளின் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்கள் வைஷ்ணவர்களாக மாறுவதற்கு எவன் உதவுகிறனோ, அவனே ஒரு வைஷ்ணவன் என்று ஸ்ரீல பக்தி வினோத தாகுரர் கூறியுள்ளார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ளதற்குச் சிறந்த உதாரணம் நாரத முனிவராவார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ள சக்திவாய்ந்த ஒரு வைஷ்ணவர் வழிபடத் தகுந்தவராவார். ஆனால் பௌதிக களங்கத்தின் காரணத்தால், சிலசமயங்களில் இத்தகைய மேலான வைஷ்ணவர்கள் மற்ற சாதாரண வைஷ்ணவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். இந்த களங்கத்தைக் கண்ட சிறந்த முனிவர்கள் ஆலயத்தில் விக்கிரக வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். இது திரேதா யுகத்தில் துவங்கப்பட்டது என்றாலும், குறிப்பாக துவாப யுகத்தில் இது மேலோங்கி இருந்தது. “த்வாபரே பரிசர்யாயாம்”. ஆனால் கலியுகத்தில் விக்கிரக வழிபாடு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தை ...

ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்தின் காலம்

கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: கலேர் தோஷ - நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண: கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத் இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும். கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ள...

ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான்.

பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்”: யாவர் என்னை எங்ஙனம் சரணடைகின்றார்களோ நான் அதற்கேற்ப அவர்களுக்கு அருள்பாலிக்கின்றேன். பகவானை ஒருவன் பக்தியுடன் அணுகினால் கூட, அப்பக்தனின் பக்தியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் உடனே பதிலுக்கு அவன் மீது முழு அன்பம் செலுத்தாதிருக்கலாம். எனினும் பகவான் உண்மையில் பதிலுக்கு அன்பு செலுத்துபவராகவே இருக்கின்றார். ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான். ஆகையினால் பகவான் புறக்கணிக்கின்றார் எனப்படுவது, அப்பக்தனின் வேண்டுகோளை உண்மையில் நிறைவேற்றுகின்றார் என்பதுவேயாகும். பகவான் கிருஷ்ணர் தம்மீது நாம் செலுத்தும் அன்பினை, நம்மிடமிருந்து பிரிந்து செல்வதின் மூலம் தீவிரப்படுத்துகின்றார். இதன் விளைவு நாம் உண்மையில் எதனை விரும்பினோமோ, எதற்காகப் பிரார்த்தித்தோமோ அந்த முழுமெய்ப் பொருள் கிருஷ்ணர் மீதான தீவிரமான காதலை நான் அடையப் பெறுகின்றோம். அதனால் வெளிப்படையாகத் தோன்றும் கிருஷ்ணரின் புறக்கணிப்பானது உண்மையில் அவரது சிந்தனையார்ந்த பதில் செய்தலும், நமது...

(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.

  அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில் முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும், ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால் அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில் (4.34) பகவான் கூறுகிறார்: தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ-தர்சின: “ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய். அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப் பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில் சில அதிகாரப்பூர்வமானவை அ...