Skip to main content

Posts

யார் அந்தணர்கள் ?

பகவான் எப்பொழுதும் அந்தணர்களிடத்தும், பசுக்களினிடத்தும் மிகுந்த கருணையுடையவராக இருக்கிறார். ஆகையினாலேயே கோ ப்ராஹ்மண ஹிதாய ச என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவான முழுமுதற் கடவுள் அந்தணர்களினால் வழிபடப்படும் தெய்வம் ஆவார். வேத இலக்கியங்களில் குறிப்பாக ரிக் வேதத்தின் மந்திரங்கள் உண்மையான அந்தணர்கள் எப்பொழுதும் விஷ்ணுவின் திருவடித் தாமரைகளையே நோக்குகின்றனர் என்று கூறுகின்றன; ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய : தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் முழுமுதற் கடவுளின் விஷ்ணு வடிவத்தினையே அதாவது கிருஷ்ணர், ராமர் மற்றும் விஷ்ணு அம்சங்களையே வழிபடுகின்றனர். அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஒரு அந்தணனின் செயல்கள் வைணவர்களுக்கு எதிரானதாக இருந்ததென்றால் அவன் அந்தணனாகக் கருதப்படமாட்டான். ஏனென்றால் அந்தணன் என்றால் வைணவன் என்றும் வைணவன் என்றால் அந்தணன் என்றே பொருளாகும். பகவானுக்குப் பக்தனான ஒருவனும் அந்தணனே ஆவான். ப்ரஹ்ம ஜானாதி ப்ராஹ்மண: என்பது சூத்திரம். பிரம்மத்தை உணர்ந்தவன் அந்தணன் (பிராம்மணன்) ஆவான். அதுபோல் முழுமுதற் கடவுளை உணர்ந்தவன் வைணவன் ஆகிறான். பிரம்மத்தை உணர்வதென்பது ம...

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

  பரமபுருஷராகிய நரசிம்மதேவர் எப்படி பிரகலாத மகாராஜனை மகிழ்வித்த பின் மறைந்தருளினார் என்பதைப் பற்றியும், சிவபெருமானால் அருளப்பட்ட ஒரு வரத்தைப் பற்றியும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலராத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாத...

அட்சய திரிதியை

  அட்சய திரிதியை 🌼🌼🌼🌼🌼🌼🌼 🌾1. பரசுராமர் அவதரித்த திருநாள் 🌾2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள் 🌾3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 🌾4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், 🌾5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. 🌾6. திரேதாயுகம் தொடங்கிய நாள் 🌾7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது. 🌾8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 🌾9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது. 🌾10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும். 🌾11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் 🌾12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஸ்ரீ ராதா மாதவர் , பகவான் ஶ்ரீ  நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்தார்  பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 🌾13. இன்றிலிருந்து 21 நாட்கள...

வேணு கீதை

 

வேணு கீதை

 

வேணு கீதை

 

ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும்

  முன்பு மனிதர்களால் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் சத்திய யுகத்திற்குப் பிறகு, வைஷ்ணவர்களுக்கிடையில் அவமரியாதையான நடவடிக்கைகளின் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்கள் வைஷ்ணவர்களாக மாறுவதற்கு எவன் உதவுகிறனோ, அவனே ஒரு வைஷ்ணவன் என்று ஸ்ரீல பக்தி வினோத தாகுரர் கூறியுள்ளார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ளதற்குச் சிறந்த உதாரணம் நாரத முனிவராவார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ள சக்திவாய்ந்த ஒரு வைஷ்ணவர் வழிபடத் தகுந்தவராவார். ஆனால் பௌதிக களங்கத்தின் காரணத்தால், சிலசமயங்களில் இத்தகைய மேலான வைஷ்ணவர்கள் மற்ற சாதாரண வைஷ்ணவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். இந்த களங்கத்தைக் கண்ட சிறந்த முனிவர்கள் ஆலயத்தில் விக்கிரக வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். இது திரேதா யுகத்தில் துவங்கப்பட்டது என்றாலும், குறிப்பாக துவாப யுகத்தில் இது மேலோங்கி இருந்தது. “த்வாபரே பரிசர்யாயாம்”. ஆனால் கலியுகத்தில் விக்கிரக வழிபாடு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தை ...