Skip to main content

Posts

"ஹரி-தாஸ-வர்யோ"-பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்!

  ஹந்தாயம் அத்ரிர் அபலா ஹரி-தாஸ-வர்யோ யத்-ராம-க்ருஷ்ண-சரண-ஸ்பரஸ்-ப்ரமோத: மானம் தனோதி ஸஹ-கோ-கணயோஸ் தயோர் யத் பாணீய-ஸூயவஸ-கந்தர-கந்த மூலை: ஹந்த—ஒ; அயம்—இந்த; அத்ரி:—மலை; அபலா:—ஒ, தோழியரே! ஹரி-தாஸ-வர்யே:—பகவானது தொண்டர்களில் மிகச் சிறந்தது; யத்- ஏனென்றால்; ராம-க்ருஷ்ண-சரண பகவான் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் தாமரைத்திருவடிகளின்; ஸ்பரஸ—ஸ்பரிசத்தினால்; ப்ரமோத:—மகிழ்ச்சியடைதல்; மானம்—மரியாதை; தனோதி—அளிக்கிறது; ஸஹ—உடன்; கோ-கணயோ:—பசுக்கள், கன்றுகள் மற்றும் ஆயர்குலச் சிறுவர்கள்; தயோ:—அவர்களுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு); யத்—ஏனென்றால்; பாணீய—குடி தண்ணிருடன்; ஸூயவஸ—மிகவும் மென்மையான புற்கள்; கந்தர—குகைகள்; கந்த—மூலை: கந்த—மூலங்கள் (கிழங்கு வகைகள்). மொழிபெயர்ப்பு பக்தர்கள் அனைவரினும் இக் கோவர்த்தனகிரியே மிகச் சிறந்ததாகும்! ஓ, தோழிப் பெண்களே, இம்மலை கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் அவர் தம் கன்றுகளுக்கும், பசுக்களுக்கும் மற்றும் ஆயர்குலச் சிறுவர்களுக்கும் தேவையான அனைத்தையும் அளிக்கின்றது. பருகுதற்கு நீர், மென்மையான பசும்புற்கள், குகைகள், கனிகள், மலர்கள், மற்றும் காய்கறிகள் போன்ற ப...

அர்த்தமற்ற பேச்சு

  விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தாதும் ஈஷா - பதே ‘ முயா விமோஹிதா விகத்தந்தே மமாஹம் இதி துர்திய : மொழிபெயர்ப்பு பகவானின் மாயா சக்தி , தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால் , அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை . ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள் , “ நான் ”, “ எனது ” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர் . பொருளுரை முழுமுதற் கடவுளின் வெல்லுதற்கரியதும் , சக்தி வாய்ந்ததுமான மாயா சக்தியால் அல்லது அறியாமையைப் பிரதிநிதிக்கும் தாழ்ந்த சக்தியால் , உயிரோட்டம் கொண்ட அகில உலகையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட முடியும் . இருப்பினும் பரமபுருஷரின் எதிரே நிற்பதற்குரிய போதுமான வலிமை அதற்கு இல்லை . அறியைமை முழுமுதற் கடவுளின் பின்புறத்தில் உள்ளது . அங்கு ஜீவராசிகளைத் தவறான வழியால் திருப்புவதற்குப் போதுமான வலிமையை அது பெற்றிருக்கிறது . அர்த்தமற்ற பேச்சைப் பேசுவதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவர்களுக்குரிய முக்கிய அறிகுறியாகும் . அர்த்தமற்ற பேச்சுக்கள் வேத இலக்கியங்கள...

பக்தி தொண்டின் மகிமை

  பரம புருஷ பகவான் , மிகவும் தூய்மையானவரும் , மேலானவரும் , பரம சக்தியமுமாவார் என்று பகவத் கீதை கூறுகிறது . அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை . இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது . குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது . காமத்திலிருந்தும் , பேராசையிலிருந்தும் விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும் . அதாவது , புலனின்ப ஆசைகளிலிருந்தும் , புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும் . எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது , சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும் . தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும் . ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும் . இதனால் அவர் பகவானை அங்கு நே...