Skip to main content

Posts

ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில ஹரிஜன் ஒருவன் வசித்து வந்தான் அவன் திருமணமாகி நெடு நாளாகியும் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாகும் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அதனால் அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் உனக்கு குழந்தை உண்டாகும் என்றார்.   தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான் ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.  அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது கோடைக்காலம் வெயில்  வெப்பத்தால் துன்பத்திற்கு ஆளானார் . சிறு தூரத்தில் தான் சென்று கொண்டிருந்த வழியில் ...

துறவி மற்றும் ஆடு

ஒரு நாள் ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாதையில் அவர் செல்லும் போது, ஒரு குயவன், தனது வீட்டின் முன் அமர்ந்து பானைகள் செய்து கொண்டிருந்தான். அருகில் ஏராளமான மண் பானைகள், சட்டிகள், குடங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலேயே, ஒரு ஆடு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அது ஓர் நொடிக்கும் அமைதியின்றி கதறிக் கொண்டே இருந்தது. துறவி அந்த இடத்தில் வந்து தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும், குயவன் மரியாதையுடன் வணங்கி, ஒரு சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரைப் பருகிய துறவி கேட்டார்: “இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?” “இல்லை சுவாமி,” என்றான் குயவன். “இது காட்டாடு. வழியில் வந்ததைக் கண்டு பிடித்து கட்டிப் போட்டேன்.” “எதற்காக?” என்று சற்றே வியப்புடன் கேட்டார் துறவி. “ஒரு பண்டிகை வரவிருக்கிறது. அந்த நாளில் இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன்,” என்றான் குயவன். துறவியின் முகத்தில் மேலும் ஆச்சரியம் தெரிந்தது. “பலியா?” என்று கேட்டார். “ஆமாம் சுவாமி. திருவிழா தினங்களில் இறைவனுக்குப் பலி கொடுக்கப்படும். அது அவருக்...

நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும்.

நாரதரின் கருணையும் கைலாஷின் விருப்பமும். ஒரு உயிர்வாழி எவ்வாறு தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, இறந்தபிறகு ஒரு உடலிலிருந்து மற்றோரு உடலிற்கு செல்கிறது என்பதை பின்வரும் கதையிலிருந்து அறியலாம். கைலாஷ் என்ற ஒருவன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான். ஒரு நாள் மாமுனிவரான நாரதர், அவனிடம் வந்து, "கைலாஷ்! என்னோடு வா. நான் வைகுந்தத்திற்கு செல்கிறேன். என்னுடன் உன்னையும் அழைத்து செல்கிறேன்", என்று கூறினார். அதற்கு கைலாஷ், "என்னை மன்னியுங்கள் ஐயா. என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். நான் அவர்களை பராமரிக்க வேண்டும். என்னால் இப்போது வர இயலாது. சிறிது காலம் கழித்து பார்க்கலாம்", என்று பதிலளித்தான். பல வருடங்கள் கழித்து நாரத முனிவர் மீண்டும் கைலாஷிடம் வந்து, "கைலாஷ்! இப்போது வைகுந்தம் வர தயாரா?" என்று கேட்டார். கைலாஷ், "அய்யா, என்னுடைய பேரப்பிள்ளைகளை நான் கவனிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உதவி என் குடும்பத்தினருக்கு மிகவும் அவசியம். என்னால் வர இயலாது", என்று கூறினான். மீண்டும் சில வருடங்கள் கழித்து அங்கு வந்த நாரத முனிவர் கைலாஷ் இற...

முகுந்த தத்தர்

ஸ்ரீ முகுந்த தத்தர் சட்டகிராம என்னும் மாவட்டத்தைச் சார்ந்த  சன்ஹரா என்னும் கிராமத்தில் பிறந்தவர், அந்த கிராமம் பாடியா எனப்படும் காவல்நிலையத்தின் எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமம் புண்டரீக வித்யாநிதியின் இல்லத்திலிருந்து பத்து க்ரோஷ,ம், அல்லது சுமார் இருபது மைல் தொலைவில் அமைந்துள்ளது. கௌஆர-க ணோத் தே,ஷ₂-தீ,பிகா (140) கூறுகிறது: வ்ரஜே ஸ்தி, தௌ காயகௌ யௌ மது கண்ட,-மது வ்ரதௌ முகுந்த - வாஸுதே வௌ தௌ தத்தௌ கௌ₂ராங்க -கா₂யகௌ "மதுகண்டர், மதுவிரதர் என்ற பெயர்களுடன் இரு அற்புதமான பாடகர்கள் விரஜத்தில் இருந்தனர். அவர்கள் சைதன்ய லீலையில் முகுந்தராகவும் வாஸுதேவ தத்தராகவும் தோன்றினர், அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சமுதாயத்தில் பாடகர்களாக செயல்பட்டனர்." சைதன்ய மஹாபிரபு மாணவராக இருந்தபோது, முகுந்த தத்தர் அவருடைய பள்ளித் தோழராவார், அவர்கள் தர்க்க வாதங்களில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முகுந்த தத்தருடன் தர்க்கத்தின் தந்திரங்களை உபயோகித்து சண்டையிடுவார். இது சைதன்ய பாகவதத்தின் ஆதி காண்டத்தில் அத்தியாயங்கள் பதினொன்றிலும் பன்னிரண்டிலும் விளக்கப்பட்டுள்ளது. சைதன்ய மஹாப...