Skip to main content

பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்




 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 8

 

பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இந்த இருபத்திரண்டாம் அத்தியாயத்திற்கான சுருக்கம் பின்வருமாறு: பலி மகாராஜனின் நடத்தையில் பரமபுருஷ பகவான் மகிழ்ந்தார். இவ்வாறாக சுதள லோகத்தில் அவரை வைத்த பகவான், அவருக்கு வரங்களை அளித்தபின், அவரது வாயில் காப்போனாக இருக்கச் சம்மதித்தார்.

பலி மகாராஜன் மிக மிக உண்மையானவராக இருந்தார். சத்தியத்தை மீறியவர் சமூகத்தின் கண்களில் அற்பமானவராகத் தோன்றுவார் என்பதால், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத பலி மகாராஜன் பெரும் அச்சத்திற்குள்ளானார். உயர்ந்த நிலையில் இருப்பவரால் நரக வாழ்வில் பலன்களை சகித்துக் கொள்ள முடியும். ஆனால் சத்தியத்திலிருந்து விலகியதால் ஏற்படும் அவதூறுக்கு அவர் மிகவும் அஞ்சுகிறார். பரமபுருஷரால் அளிக்கப்பட்ட தண்டனையை பலி மகாராஜன் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். விஷ்ணுவிடம் விரோதம் கொண்டதால், பல அஷ்டாங்க பலி மகாராஜனின் வம்சத்தில் பலர் இருந்தனர். குறிப்பாக பிரகலாத மகாராஜனுக்கு பக்தித் தொண்டில் இருந்த மனவுறுதியை பலி மகாராஜன் நினைவு கூர்ந்தார். இவைகளை எல்லாம் கருத்திற் கொண்ட அவர், விஷ்ணுவின் மூன்றாவது அடிக்குத் தமது தலையையே தானமாகக் கொடுக்க முடிவு செய்தார். முழுமுதற் கடவுளை திருப்திபடுத்துவதற்காக சிறந்த புண்ணிய புருஷர்கள் எப்படி தங்களது குடும்ப உறவுகளையும், பௌதிக உடைமைகளையும் துறந்தனர் என்பதையும் பலி மகாராஜன் கருத்திற் கொண்டார். உண்மையில், பகவானின் அந்தரங்கத் தொண்டர்களாக ஆகும் நோக்கத்தில், அவரைத் திருப்திபடுத்துவதற்காக, சில சமயங்களில் அவர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர். அதற்கேற்ப, முந்தைய ஆசார்யர்கள் மற்றும் பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமாக, தாம் பெற்றி பெற்றதாகவே பலி மகாராஜன் கருதினார்.

நாக பாசத்தால் சிறைப்படுத்தப்பட்ட பலி மகாராஜன், பகவானிடம் பிரார்த்தனைகள் செய்யும்பொழுது, அவரது பாட்டனாரான பிரகலாத மகாராஜன் அங்கு தோன்றினார். பரமபுருஷர் எப்படி தந்திரமான முறையில் பலி மகாராஜனின் உடைமைகளை பறித்துக் கொள்வதன் மூலமாக பலியை விடுவித்தார் என்பதை அவர் விளக்கிக் கூறினார். பிரகலாத மகாராஜனின் முன்னிலையில் பிரம்மதேவரும், பலியின் மனைவியான விந்தியாவளியும் பரமபுருஷரின் உயர்வை விவரித்தனர். பலி மகாராஜன் அனைத்தையும் பகவானிடம் கொடுத்து விட்டதால், அவரது விடுதலைக்காக அவர்கள் வேண்டினர். பக்தரற்றவரின் உடைமை எப்படி ஆபத்தாகவும், ஆனால் பக்தனின் செல்வம் எப்படி பகவானால் அளிக்கப்பட்ட வரமாகவும் உள்ளன என்பதை பிறகு பகவான் விளக்கினார். பிறகு, பலி மகாராஜனிடம் திருப்தியடைந்த பரமபுருஷர், அவரைக் காப்பதற்காக தமது சக்கரத்தையே அளித்ததுடன், அவருடனேயே என்றும் இருப்பதாகவும் வாக்களித்தார்.



(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 22 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...