Skip to main content

தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்

 



 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 9

 

தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்வீகமான திருவிளையாடல்களை விளக்கினார். பௌதிக உலகை படைத்ததற்காகவும், அனைவரிடமும் சமமாக இருப்பதற்காகவும் மற்றும் கற்பக விருட்சத்தைப் போல், பக்தர்களிடம் மிகவும் தயாள குணம் கொண்டவராக இருப்பதற்காகவும் பரமபுருஷரை பிரகலாத மகாராஜன் போற்றிப் புகழ்ந்தார். உண்மையில், பகவான் அவரது பக்தர்களிடம் மட்டுமல்லாமல், அசுரர்களிடம் கூட அன்பு கொண்டுள்ளார் என்று அவர் புகழ்ந்தார். மேலும் பரமபுருஷரின் வரம்பற்றதும், காரணமற்றதுமான கருணையையும் அவர் விவரித்தார். பிறகு, கூப்பிய கரங்களுடன், பகவானுக்குத் தமது பணிவான வணக்கங்களை அவர் சமர்ப்பித்தார். மேலும் பகவானை வலம்வந்த பின், அவரது உத்தரவுப்படி பிரகலாத மகாராஜனும் சுதள லோகத்திற்குச் சென்றார். பகவான் பிறகு சுக்ராசார்யரை அழைத்து, யாகச் சடங்கை நிறைவேற்றுவதில் பலி மகாராஜன் செய்த குற்றங்களையும், குறைகளையும் விளக்கும்படி உத்தரவிட்டார். பகவானின் புனித நாமங்களை உச்சரித்ததால் பலன்நோக்குக் கருமங்களிலிருந்து சுக்ராசார்யர் விடுபட்டார். மேலும் பகவானின் நாம ஜபம் எப்படி பந்தப்பட்ட ஆத்மாக்களின் குறைகளையெல்லாம் போக்கிவிடும் என்பதையும் அவர் விளக்கினார். பிறகு அவர் பலி மகாராஜனின் யாகச் சடங்கை பூர்த்தி செய்தார். பகவான் வாமன தேவர் தேவேந்திரனுக்கு சுவர்க்க லோகப் பதவியை திருப்பிக் கொடுத்ததால், பெரும் முனிவர்கள் அனைவரும் அவரை இந்திரனின் பரோபகாரியாக ஏற்றதுடன், எல்லாப் பிரபஞ்ச விவகாரங்களையும் பராமரிப்பவராகவும் ஏற்றனர். பெரும் மகிழ்ச்சியடைந்த இந்திரன், வாமன தேவரை தனக்கெதிரில் அமரச் செய்து, தனது சகாக்களுடன் விமானத்தில் புறப்பட்டுச் சென்று சுவர்க்க லோகத்திற்குள் மீண்டும் பிரவேசித்தார். பலி மகாராஜனின் யாக அரங்கில் பகவான் விஷ்ணுவின் அற்புதச் செயல்களைக் கண்ட தேவர்கள், புண்ணிய புருஷர்கள், பிதாக்கள், பூதர்கள் மற்றும் சித்தர்கள் ஆகிய அனைவரும் பகவானை திரும்பத் திரும்பப் போற்றிப் புகழ்ந்தனர். பகவான் விஷ்ணுவின் பெருமை மிக்க செயல்களைப் பற்றி பாடுவதும், கேட்பதுவுமே பந்தப்பட்ட ஆத்மாக்களுக்குரிய மிகவும் மங்களகரமான கடமை என்று கூறுவதன் மூலமாக இந்த அத்தியாயம் நிறைவு பெறுகிறது.



(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 23)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...