Skip to main content

Posts

பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  6   பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார். சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய...

பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல்

ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  5   பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இப்பத்தொன்பதாம் அத்தியாம், எப்படி பகவான் வாமனதேவர் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டார் என்பதையும், எப்படி பலி மகாராஜன் அவரது திட்டத்திற்கு சம்மதித்தார் என்பதையும், பகவான் வாமனதேவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதிலிருந்து பலி மகாராஜனை சுக்ராசார்யர் எப்படி தடுத்தார் என்பதையும் விவரிக்கிறது. வாமனதேவரை ஒரு பிராமண புத்திரரென்று எண்ணிய பலி மகாராஜன், அவர் விரும்பிய எதையும் கேட்கலாம் என்று அவரிடம் கூறினார். அப்போது பகவான் வாமனதேவர் இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷன் ஆகியோரின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து பேசினார். பலி மகாராஜன் பிறந்த குடும்பத்தை இவ்வாறு புகழ்ந்த பின், ராஜனிடம் அவர் மூன்றடி நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதாகையால், இந்த நிலத்தை தானமாகக் கொடுக்க பலி மகாராஜன் ஒப்புக் கொண்டார். ஆனால் வாமனதேவர் தேவர்களின் நண்பரான விஷ்ணு என்பதைப் புரிந்துகொண்ட சுக்ராசார்யர், இந்த நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பலி மகா...

குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  4   குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த அத்தியாயம், பகவான் வாமனதேவர் எப்படி தோன்றினார் என்பதையும், பலி மகாராஜனின் யாக அரங்கிற்கு அவர் எப்படி சென்றார் என்பதையும், பலி மகாராஜன் எப்படி அவரை நன்கு வரவேற்று, அவர் யாசித்ததை அளித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதையும் விவரிக்கிறது. பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம் உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு தோன்றினார். அப்போது (உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலிம், தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால் மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் விஜயா என்று அழைக்கப்படுகிறது. சத் - சித் - ஆனந்த உட...

பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல்

ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  3   பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல், அதிதியால் இயற்றப்பட்ட பயோ - விரதத்தினால் மிகவும் திருப்தியடைந்த பரமபுருஷ பகவான் பூரண வைபவங்களுடன் அவள்முன் தோன்றினார். பகவான் அவளது பிரார்த்தனைக்கிணங்கி அவளது புதல்வராக அவதரிக்க ஒப்புக்கொண்டார். அதிதி தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பயோ - விரத சடங்கை இயற்றியபின், உண்மையாகவே அவளிடம் மிகவும் திருப்தியடைந்த பகவான், மஞ்சள் நிற ஆடைணயிந்தவராய், நான்கு கரங்களுடன் அவள் முன் தோன்றினார். தனக்கெதிரே பகவான் எழுந்தருளி இருப்பதைக் கண்ட அதிதி, உடனடியாக எழுந்து, பகவான் மீதுள்ள மிகவும் பரவச அன்புடன் தரையில் விழுந்து மரியாதையுடன் அவரை வணங்கினாள். பரவச உணர்வின் காரணத்தால் அவளது தொண்டை அடைத்துக் கொண்டது. பக்தியால் அவளது உடல் முழுவதும் நடுங்கியது. பகவானுக்குப் பொருத்தமான பிரார்தனைகளை அவன் சமர்ப்பிக்க விரும்பிய போதியிலும், அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இதனால் அவள் சிற...

பயோ - விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  2   பயோ - விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல், தேவர்களின் தாயான அதிதி பெருந்துன்பத்திற்கு ஆளானதால், அவளது புத்திரர்களின் நன்மைக்காக எப்படி விரதங்களை அனுஷ்டிப்பது என்பதைப் பற்றி அவளது கணவரான கஸ்யப முனிவர் அவளிடம் கூறினார். சுவர்க்கலோக இராஜ்யங்களில் தேவர்கள் காணப்படாததால் அவர்களின் தாயாகிய அதிதி, பெரும் வேதனையடைந்தாள். பற்பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள், சமாதி நிலையிலிருந்து மீண்ட பெரு முனிவரான கஸ்யபர் தமது ஆசிரமத்திற்கு திரும்பிச் சென்றார். தமது ஆசிரமம் பொலிவிழந்து கிடப்பதையும், தமது மனைவி வருத்தத்துடன் இருப்பதையும் அவர் கண்டார். ஆசிரமத்தில் எங்கு பார்த்தாலும் துக்கத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. ஆகவே முனிவர் ஆசிரமத்தின் நலனைப் பற்றியும், கவலையுடன் அவள் காணப்படுவதற்கான காரணத்தைப் பற்றியும் வினவினார். ஆசிரமத்தின் நலனைப் பற்றி கஸ்யப முனிவருக்கு அறிவித்த பின், தமது புத்திரர்களின் பிரிவினால் தாம் கவலைப்ப...