Skip to main content

பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல்



ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 3

 

பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல், அதிதியால் இயற்றப்பட்ட பயோ - விரதத்தினால் மிகவும் திருப்தியடைந்த பரமபுருஷ பகவான் பூரண வைபவங்களுடன் அவள்முன் தோன்றினார். பகவான் அவளது பிரார்த்தனைக்கிணங்கி அவளது புதல்வராக அவதரிக்க ஒப்புக்கொண்டார்.


அதிதி தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பயோ - விரத சடங்கை இயற்றியபின், உண்மையாகவே அவளிடம் மிகவும் திருப்தியடைந்த பகவான், மஞ்சள் நிற ஆடைணயிந்தவராய், நான்கு கரங்களுடன் அவள் முன் தோன்றினார். தனக்கெதிரே பகவான் எழுந்தருளி இருப்பதைக் கண்ட அதிதி, உடனடியாக எழுந்து, பகவான் மீதுள்ள மிகவும் பரவச அன்புடன் தரையில் விழுந்து மரியாதையுடன் அவரை வணங்கினாள். பரவச உணர்வின் காரணத்தால் அவளது தொண்டை அடைத்துக் கொண்டது. பக்தியால் அவளது உடல் முழுவதும் நடுங்கியது. பகவானுக்குப் பொருத்தமான பிரார்தனைகளை அவன் சமர்ப்பிக்க விரும்பிய போதியிலும், அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இதனால் அவள் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாள். பிறகு பகவானுடைய பேரழகைக் கண்டு ஆறுதலடைந்து, அவளது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தாள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய முழுமுதற்கடவுள் அவளிடம் மிகவும் திருப்தியடைந்து, ஓர் அம்ச - அவதார ரூபத்தில் அவளது புதல்வராக அவதரிக்க ஒப்புக்கொண்டார். கஸ்யப முனிவரின் தவங்களால் அவர் ஏற்கனவே திருப்தியடைந்திருந்தார். இவ்வாறாக அவர்களது புதல்வராக அவதரிப்பதுடன், தேவர்களையும் காப்பதற்குச் சம்மதித்தார். இவ்வாறு தமது வாக்குறுதியை அளித்த பின் பகவான் மறைந்தருளினார். அதிதி பகவானின் கட்டளையைப் பின்பற்றி கஸ்யப முனிவரின் தொண்டில் ஈடுபட்டாள். அவரால் சமாதியின் வாயிலாக, பகவான் தனக்குள் இருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறாக தமது விந்துவை அவர் அதிதியின் கருவினுள் புகுத்தினார். பரமபுருஷ பகவான் அதிதியின் கருவில் எழுந்தருளியிருப்பதை ஹிரண்யகர்பர் எனப்படுபவரான பிரம்மதேவர் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் பகவானிடம் பிரார்த்தனைகள் செய்தார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 17 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...