Skip to main content

குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர்


 


ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 4

 

குள்ள-அவதாரமான பகவான் வாமனதேவர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்த அத்தியாயம், பகவான் வாமனதேவர் எப்படி தோன்றினார் என்பதையும், பலி மகாராஜனின் யாக அரங்கிற்கு அவர் எப்படி சென்றார் என்பதையும், பலி மகாராஜன் எப்படி அவரை நன்கு வரவேற்று, அவர் யாசித்ததை அளித்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதையும் விவரிக்கிறது.

பகவான் வாமனதேவர் இவ்வுலகில், சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றுடன் அதிதியின் கருவிலிருந்து தோன்றினார். அவரது தேகம் கருமை நிறம் கொண்டதாக இருந்தது. அவர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். அபிஜித் நட்சத்திரம் உதயமாகியிருந்த சமயத்தில், ஸ்ரவண - துவாதசி எனும் மங்களகரமான வேளையில் பகவான் விஷ்ணு தோன்றினார். அப்போது (உயர் கிரக அமைப்பு, பரவெளி மற்றும் இந்த பூமி ஆகியவை உட்பட) மூவுலகங்களிலிம், தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பருவ காலங்களும் கூட பகவானின் தோற்றத்தால் மகிழ்ச்சியடைந்தனர். எனவே மங்களகரமான இந்நாள் விஜயா என்று அழைக்கப்படுகிறது. சத் - சித் - ஆனந்த உடலைக் கொண்டவரான முழுமுதற் கடவுள் கஸ்யபருக்கும், அதிதிக்கும் புதல்வராகத் தோன்றியபோது, அவரது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். அவரது தோற்றத்திற்குப் பிறகு, பகவான் குள்ளமான (வாமன) ரூபத்தை மேற்கொண்டார். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெரும் முனிவர்கள் எல்லோரும், கஸ்யப முனிவரின் முன்னிலையில் பகவான் வாமனரின் பிறப்புச் சடங்கை நிறைவேற்றினர். பகவான் வாமனதேவரின் புனித நூல் சடங்கின்போது, அவர் சூரியதேவன், பிருஹஸ்பதி, பூமாதேவி, சுவர்க்க லோகங்களுக்குரிய அதி தேவதை, அவரது தாயார், பிரம்தேவர், குபேரன் மற்றும் ஏழு ரிஷிகள் முதலானவர்களால் கௌரவிக்கப்பட்டார். வாமன தேவர் பிறகு பிருகு, வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் யாகம் இயற்றிக் கொண்டிருந்த, நர்மதா நதியின் வடக்கில், பிருகுகச்சம் எனப்படும் இடத்தில் நிறுவப்பட்டிருந்த யாக அரங்கிற்குச் சென்றார். பகவான் வாமனதேவர் வைக்கோலினால் ஆன ஒரு கச்சையையும், மான் தோலாலான ஒரு மேலாடையையும், ஒரு புனித நூலையும் அணிந்திருந்ததுடன், அவரது கரங்களில் ஒரு தண்டம், ஒரு குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவராய் பலி மகாராஜனின் யாக அரங்கில் தோன்றினார். அவரது தெய்வீகத் தன்மையுடைய பிரகாசமான தோற்றத்தினால், வேதியர்கள் அனைவரும் தங்களது பொலிவை இழந்தனர். இவ்வாறாக அவர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து பகவான் வாமனதேவரை துதித்தனர். பகவான் வாமனதேவரின் கால் விரலிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீரை சிவ பெருமான் கூட தமது தலைமீது தாங்கிக் கொள்கிறார். ஆகவே, பகவானது பாதங்களைக் கழுவிய பின், அந்நீரை பலி மகாராஜன் உடனே தமது தலைமீது தாங்கிக் கொண்டார். இதனால் தானும், தமது முன்னோர்களும் பெருமையடைந்ததை உணர்ந்தார். பிறகு பகவான் வாமனதேவரின் நலனைப் பற்றி வினவிய பலி மகாராஜன், தனம், ஆபரணங்கள் அல்லது அவர் விரும்பக்கூடிய எதையும் தன்னிடமிருந்து கேட்டுப் பெறுமாறு பகவானை வேண்டினார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 18 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...