Skip to main content

பயோ - விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல்


 

ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 2

 

பயோ - விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல், தேவர்களின் தாயான அதிதி பெருந்துன்பத்திற்கு ஆளானதால், அவளது புத்திரர்களின் நன்மைக்காக எப்படி விரதங்களை அனுஷ்டிப்பது என்பதைப் பற்றி அவளது கணவரான கஸ்யப முனிவர் அவளிடம் கூறினார்.


சுவர்க்கலோக இராஜ்யங்களில் தேவர்கள் காணப்படாததால் அவர்களின் தாயாகிய அதிதி, பெரும் வேதனையடைந்தாள். பற்பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள், சமாதி நிலையிலிருந்து மீண்ட பெரு முனிவரான கஸ்யபர் தமது ஆசிரமத்திற்கு திரும்பிச் சென்றார். தமது ஆசிரமம் பொலிவிழந்து கிடப்பதையும், தமது மனைவி வருத்தத்துடன் இருப்பதையும் அவர் கண்டார். ஆசிரமத்தில் எங்கு பார்த்தாலும் துக்கத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. ஆகவே முனிவர் ஆசிரமத்தின் நலனைப் பற்றியும், கவலையுடன் அவள் காணப்படுவதற்கான காரணத்தைப் பற்றியும் வினவினார். ஆசிரமத்தின் நலனைப் பற்றி கஸ்யப முனிவருக்கு அறிவித்த பின், தமது புத்திரர்களின் பிரிவினால் தாம் கவலைப்படுவதாக அவரிடம் கூறினாள். அதன்பிறகு தமது புத்திரர்களால் எவ்வாறு மீண்டும் திரும்பி வந்து அவரவரர் பதவிகளை ஏற்க முடியும் என்பதைப் பற்றி தன்னிடம் கூறுமாறு அவரை வேண்டினாள். தமது புத்திரர்கள் எல்லா நல்லதிர்ஷ்டங்களையும் பெற வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதிதியின் வேண்டுகோளினால் திகைப்படைந்த கஸ்யப முனிவர், தன்னுணர்வைப் பற்றிய தத்துவம், ஜடத்திற்கும், ஆன்மீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு மற்றும் பௌதிக நஷ்டத்தால் எப்படி பாதிப்படையாமல் இருப்பது எனும் விஷயங்களைப் பற்றி அவளுக்கு உபதேசித்தார். ஆனால் அவ்வுபதேசங்களைக் கொடுத்த பின்னரும் அதிதி திருப்தி அடையாததைக் கண்ட கஸ்யப முனி, வாசுதேவரான, ஜனார்தனனை வழிபடுமாறு அவளுக்கு அறிவுரை கூறினார். வாசுதேவனால் மட்டுமே அவளைத் திருப்திபடுத்தி, அவளது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று அவளுக்கு அவர் உறுதி கூறினார். அதிதி பிறகு பகவான் வாசுதேவனை வழிபடும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். பிரஜாபதியான கஸ்யபரும் பயோ - வ்ரதம் எனப்படும் ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி அவளிடம் கூறினார். இது பன்னிரண்டு நாட்களில் செய்யப்பட வேண்டியதாகும். இம்முறையினால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எப்படி திருப்தி செய்வது எனும் முறையை பிரம்ம தேவர் அவருக்கு உபதேசம் செய்திருந்தார். இவ்வாறாக இவ்விரதத்தையும், அதன் கட்டுப்பாட்டு விதிகளையும் மேற் கொள்ளும்படி தமது மனைவிக்கு அவர் அறிவுரை கூறினார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 16 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...