உலகம் முழுவதும் பகை இல்லாமல் அமைதியாக வாழ உதவும் ஶ்ரீமத் பாகவதம்











பரம புருஷரின் புனித நாமத்தையும், புகழையும் பரப்புவதால் அசுத்தமடைந்த உலக சூழ்நிலை மாறும். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்ற உன்னதமான இலக்கியங்களை பரவச் செய்வதால் மக்கள் தங்களது நடவடிக்கைகளில் நிதான புத்தியுள்ளவர்களாக மாறுவார்கள். ஸ்ரீமத் பாகவதத்தின் இக்குறிப்பிட்ட சுலோகத்திற்கு நாம் விளக்கவுரை அளித்துக் கொண்டிருந்தபோது ஆபத்தான ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. நமது அண்டை நாட்டு நண்பனாகிய சீனா இந்தியாவின் எல்லைப்புறத்தைக் கைப்பற்றும் நோக்த்துடன் தாக்கியது. அரசியல் விவகாரங்களில் நமக்கு எந்த வேலையும் கிடையாது. இருப்பினும் சீனாவும், இந்தியாவும் முன்பு பல நூற்றாண்டுக் காலமாக பகை இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வந்தன. காரணம் என்னவெனில், அக்காலங்களில் அவர்கள் தெய்வ உணர்வு கொண்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தனர். அத்துடன் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் கடவுள் உணர்வும், இதயத் தூய்மையும், எளிமையும் கொண்டவையாக இருந்தன. அச்சமயத்தில் அரசியல் தந்திரம் எனும் கேள்விக்கே இடமில்லாமல் இருந்தது. வசிப்பதற்கு அவ்வளவு பொருத்தமாக இல்லாத நிலப்பரப்பின் மீது சச்சரவுகளுக்கான காரணம் சீன, இந்திய தேசங்களுக்கு இருக்கவில்லை. இவ்விஷயத்தில் சண்டை செய்வதற்கான காரணம் நிச்சயமாக இல்லை. ஆனால் நாம் ஏற்கனவே விளக்கியதுபோல், கலி யுகத்தின் காரணத்தால், சிறிய கோபமூட்டும் விஷயத்தினாலும் சண்டை நிகழக்கூடிய வாய்ப்பு எப்பொழுதுமே உள்ளது. விவாதிக்கப்பட்ட பிரச்சினை இதற்குச் காரணமல்ல. ஆனால் இந்த யுகத்தின் தூய்மையற்ற சூழ்நிலையே இதற்குக் காரணமாகும். பரம புருஷரின் நாமத்தையும், புகழையும் போற்றித் துதிப்பதை நிறுத்திவிட, மக்களின் ஒரு பிரிவினரால் பிரசார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, உலகம் முழுவதிலும் ஸ்ரீமத் பாகவதத்தின் செய்தியைப் பரப்ப வேண்டிய பெரும் அவசியம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தின் உன்னதமான செய்தியை உலகமெங்கும் பரப்ப வேண்டியது ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியரின் கடமையாகும். இதனால் மிகச்சிறந்த நன்மையை மட்டுமின்றி நாம் விரும்பும் உலக அமைதியையும் கொண்டு வர முடியும். பொறுப்புமிக்க இவ்வேலையை அலட்சியம் செய்ததன் மூலமாக இந்தியா தனது கடமையிலிருந்து தவறிவிட்டதால், உலக முழுவதிலும் இன்று அளவுக்கதிகமான சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தின் உன்னதமான செய்தியை உலகத் தலைவர்கள் பெறுவார்களானால், அவர்களது இதயத்தில் மாற்றம் ஏற்படுவது நிச்சயம். பொதுமக்களும் இயல்பாகவே அவர்களைப் பின்பற்றுவார்கள். இக்காலத்து அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் தலைவர்கள் ஆகியோரின் கரங்களில் பொதுமக்கள் கருவிகளாக உள்ளனர். தலைவர்களுக்கு மட்டும் இதய மாற்றம் ஏற்படுமானால், உலகச் சூழ்நிலையில் பூரணமான ஒரு மாற்றம் ஏற்படுவது உறுதி. பொதுமக்களின் கடவுள் உணர்வை மறுபடியும் உயிர்த்தெழச் செய்வதற்கும், உலகச் சூழ்நிலையை தெய்வீகமாக மாற்றுவதற்கும், மிகச்சிறந்த இந்நூலை அளித்து, இதன் மூலமாக தெய்வீகமான செய்திகளை எடுத்துச் சொல்லும் நேர்மையான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம். இம்முயற்சியில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்ததை நாம் அறிவோம். இந்த நூலை, குறிப்பாக ஒரு அந்நிய மொழியில் அளிப்பதானது நிச்சயமாக தோல்வியாகவே இருக்கும். இதை நல்ல முறையில் அளிக்க வேண்டுமென்று நாம் நேர்மையாக முயற்சித்தபோதிலும் இதில் மிகவும் அதிகமான இலக்கிய முரண்பாடுகள் இருக்கவே செய்யும். இவ்விஷயத்தில் குறைகள் பல இருப்பினும், இது சர்வசக்தி படைத்த இறைவனைப் புகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நேர்மையான முயற்சி என்பதையும், இவ்விஷயத்தின் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு, இதை சமூகத் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு வீட்டில் தீ பற்றிக் கொள்ளும்போது, வீட்டில் வசிப்பவர்கள் அண்டை வீட்டுக்காரர்களின் உதவியைப் பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். அண்டை வீட்டார் அன்னிய தேசத்தவராக இருக்கக்கூடும். இருப்பினும் தீயின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொழியை அறியாமலேயே தங்களது நிலையை அண்டை வீட்டாருக்குப் புரியும்படி செய்து விடுகின்றனர். ஒரே மொழியில் நிலைமையை வெளிப்படுத்தாதபோதும், அண்டை வீட்டினர் தேவைப் புரிந்து கொள்கின்றனர். அசுத்தமடைந்துள்ள உலகச் சூழ்நிலை முழுவதிலும் ஸ்ரீமத் பாகவதத்தின் உன்னதமான இச்செய்தியைப் பரப்புவதற்கும் இதேபோன்ற ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இது ஆன்மீகமான நன்மைகளைக் கொண்டதொரு நுணுக்கமான விஞ்ஞானமாகும். எனவே நுணுக்கமான உள்விவகாரத்தில்தான் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம், மொழியில் அல்ல. மிகச்சிறந்த இந்நூலின் உள்விவரங்களை உலக மக்கள் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம்.
(ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீமத்பாகவதம் / 1.5.11)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment