Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை



 கீதா மஹாத்மியம்

மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 18 பற்றிய வர்ணனை

பார்வதி தேவி, சிவபெருமானிடம், "அன்பான கணவரே ! தாங்கள் இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறினீர்கள். இப்பொழுது தயை கூர்ந்து பதினெட்டாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைப்பீர்களாக" என்று கூறினார்.

சிவபெருமான் கூறினார், "இமயத்தின் புதல்வியே (பார்வதி) ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை கேட்பாயாக. இது அணைத்து வேதங்களை காட்டிலும் சிறந்ததாகும்; நித்தியமான ஆனந்தத்தை அளிக்கக்கூடியதாகும்; இந்த மகைமைகளை கேட்கும் எவரும் பௌதிக ஆசிகளை துறப்பர்; தூய்மையான ஒரு பக்தருக்கு இது அமிர்தமாகும்; பகவான் விஷ்ணுவின் உயிராகும்; தேவேந்திரருக்கும் மற்றும் அணைத்து தேவர்களுக்கும், சனகர் மற்றும் சனந்தர் போன்ற யோகிகளுக்கும் இது ஆறுதலாகும்; இதை படிப்பவர்கள் யமதூதர்களை விலக செய்கின்றனர்; பௌதிக உலகத்தின் துன்பங்களிலிருந்தும் அணைத்து விதமான பாவங்களிலிருந்தும் ஒருவர் விடுபடவேண்டுமென்றால் இதை படிப்பதை தவிர வேறுதுவும் செய்யவேண்டியதில்லை; இப்போது கவனமாக கேட்பாயாக".

மேரு பர்வதத்தின் சிகரத்தில் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட "அமராவதி" என்ற தேவலோகம் உள்ளது. அதற்குள் தேவேந்திரரும் அவரது மனைவியும் அணைத்து தேவர்களின் சேவையை ஏற்று வருகின்றனர். ஒரு நாள் தேவேந்திரர் தன் அரியணையில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மிக அழகாக ஒரு மனிதன் வருவதை கவனித்தார். அந்த மனிதனுக்கு விஷ்ணுதூதர்கள் சேவை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திரர், நிலை தடுமாறி அறியணையிலிருந்து கிழே விழுந்தார். அப்போது அவர் தலையில் அணிந்திருந்த மகுடமும் கிழே விழுந்தது. தேவேந்திரருக்கு சேவை செய்து கொண்டிருந்த தேவர்கள், இதை கவனித்தவுடன், அந்த மகுடத்தை எடுத்து அந்த அழகான மனிதனுக்கு சூட்டினார்கள். அந்த மனிதனை புதிய இந்திரராக ஏற்று அணைத்து தேவர்களும் அவருக்கு ஆரத்தி செய்து கீர்த்தனங்கள் பாடி அவரை வணங்கினார்கள். பல ரிஷிகள் அங்கு வருகை தந்து அவரை ஆசிர்வதித்து வேத பாராயணங்கள் செய்தனர். அப்சரஸ்களும் கந்தர்வர்களும் அங்கு வருகை தந்து மிகவும் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். இவ்வாறாக, புதிய இந்திரன் எந்த விதமான அஸ்வமேத யாகங்களையும் செய்யாமலேயே தேவர்களின் சேவையை அனுபவித்துக்கொண்டிருந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த உண்மையான இந்தியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

அவர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டார், "இந்த புதிய மனிதன் இதுவரை ஏன்டா கிணறுகளோ ஆறோ குளமோ அமைக்கவில்லை; மரக்கன்றுகள் கூட நட்டதில்லை;பஞ்சம் வந்தபோது யாருக்கும் தானம் கூட வழங்கவில்லை; எந்த விதமான யாகங்களையும் செய்ததில்லை; புனித தாமத்திற்கு எந்த தானமும் செய்ததில்லை. இவ்வாறிருக்க என்னுடைய பதவியை இவன் எவ்வாறு அடைய முடியும்?". மனதில் இதனை சந்தேகங்களுடன், தேவேந்திரர் பகவான் விஷ்ணுவை தரிசிக்க பாற்கடலுக்கு சென்றார். ஒரு வழியாக பகவான் விஷ்ணுவின் தரிசனம் கிடைத்த பிறகு, தேவேந்திரர் விஷ்ணுவிடம், "பகவான் விஷ்ணுவே! முன்னொரு காலத்தில் நான் பல யாகங்களையும், பல புண்ணிய காரியங்களையும் செய்ததன் பலனாக தேவேந்திரராக பொறுப்பேற்கும் வாய்ப்பினை பெற்றேன். ஆனால் இந்த முறை இந்திரராக பொறுப்பேற்றிருக்கும் அந்த மனிதன் தன் வாழ்வில் எந்த விதமான யாகங்களோ, புண்ணிய காரியங்களோ செய்ததாக தெரியவில்லை. அப்படியிருக்கையில் எவ்வாறு என் பதவியை அடைந்தான்?" என்று வினவினார்.

பகவான் விஷ்ணு கூறினார், "அந்த தூய ஆத்மா, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் ஐந்து ஸ்லோகங்களை படித்து வந்ததன் காரணமாகவே, இவ்வளவு யாகங்கள் மற்றும் புண்ணிய காரியங்கள் செய்த பலன்களை அனுபவிக்க முடிந்தது. சொர்கத்தின் அதிபதியாக பல ஆண்டுகள் அனுபவித்து விட்டு அந்த ஆத்மா என்னை வந்தடையும். தாங்களும் இவ்வாறு தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை படித்து வந்தால் வெகு விரைவாக என்னுடைய தாமத்தை வந்தடையலாம்".

பகவான் விஷ்ணு கூறியதை கேட்ட தேவேந்திரர், ஒரு பிராமணருடைய தோற்றத்தில், கோதாவரி நதிக்கரைக்கு வந்தார். அங்கு கலெக்ரானி என்ற புனித கிராமம் இருந்தது. அந்த இடத்தில் பகவான் "காலேஷ்வர் " என்ற பெயரால் வழிபடப்படுகிறார். அந்த நதிக்கரையில் ஒரு தூய்மையான பிராமணர் வசித்து வந்தார். அவருக்கு அணைத்து வேத சாஸ்திரங்களின் குறிக்கோள் மற்றும் இரகசியம் மிக தெளிவாக தெரிந்திருந்தது. ஆகையால் தினமும் அவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை அங்கு அமர்ந்து படிப்பார். இதை கண்ட தேவேந்திரர், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிதும் தாமதிக்காமல், அந்த பிராமணரின் பாதங்களில் விழுந்து வணங்கி ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை தனக்கு கற்றுத்தருமாறு வேண்டினார். அதை கற்றறிந்த பிறகு, சிறிது காலத்திற்கு அதை தினமும் வாசித்தார். அதன் பலனாக ஒரு வழியாக விஷ்ணுலோகத்தை சென்றடைந்தார். அங்கு சென்றபிறகுதான் அவருக்கு தெரிந்தது, விஷ்ணுலோகத்தில் அனுபவிக்கும் பேரானந்தத்தை ஒப்பிடுகையில், தான் தேவேந்திரனாக இருந்த போது அனுபவித்தது ஒன்றுமில்லை என்று.

எனதன்பு பார்வதியே, இதனால் தான் பல மாமுனிவர்கள் குறிப்பாக ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை தினமும் வாசிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பகவான் விஷ்ணுவின் திருப்பாதங்களை வெகு விரைவாக சென்றடைய முடியும்.


கீதா மஹாத்மியத்தின் மகிமைகள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


எவரொருவர் இந்த கீதா மஹாத்மியத்தை வாசிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ, அவர் சுமந்துகொண்டிருக்கும் அணைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார். எவரொருவர் இந்த மகிமைகளை முழு நம்பிக்கையோடு நினைவில் கொள்கிறார்களோ அவர் அனைத்து புண்ணிய காரியங்களின் பலன்களையும் அணைத்து யாகங்களின் பலன்களையும் தனதாக்குவர். அவர் உலகிலுள்ள அணைத்து செழுமைகளையும் அனுபவித்து விட்டு பகவான் விஷ்ணுவின் தாமத்தை சென்றடைவர்


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...