Skip to main content

ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை


 கீதா மஹாத்மியம்

ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை


பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.

ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை

***************************

பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 12 பற்றிய வர்ணனை

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்".

தெற்கே, கோலாப்பூர் என்ற தலத்தில், பகவான் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷிமியின் ஆலயம் உள்ளது. அங்கு அவர் அணைத்து தேவர்களாலும் வழிபடப்படுகிறார். அந்த தலம் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லதாகும். ருத்ரகயாவும் அங்கு அமைந்துள்ளது. ஒரு நாள் ஒரு இளவரசர் அங்கு வந்தார். அவருடைய உடல் பொன்னிறமாகவும், அவருடைய கண்கள் மிக அழகாகவும் இருந்தன. உறுதியான தோள்களும், அகலமான பேழையும் கொண்டிருந்தார் அவர். அவருடைய கரங்கள் உறுதியாகவும் நீளமாகவும் இருந்தன. அவர் கோலாப்பூரை அடைந்ததும் அங்குள்ள மணிகண்ட தீர்த்தத்திற்கு சென்று நீராடிவிட்டு தன்னுடைய மூதாதையர்களுக்கு வழிபாடு செய்தார். பின்பு அங்கிருந்து மஹாலக்ஷ்மியின் ஆலயத்திற்கு வந்து, லக்ஷ்மிதேவியை வணங்கிவிட்டு, பின்வருமாறு பிரார்த்திக்க ஆரம்பித்தார். "கருணையின் வடிவான தேவி, தாங்கள் மூவுலகிலும் அனைவராலும் பூஜிக்கப்படுபவர். அணைத்து நன்மைகளையும் அளிக்கக்கூடியவர்; அணைத்து ஜீவாத்மாக்களுக்கும் நீங்களே அடைக்கலமாவீர்கள்; அணைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யக்கூடியர்வர்; பகவான் அச்சுதருடைய அற்புத சக்தியாவீர்கள்; பக்தர்களை காப்பவர்; பக்தர்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்பவர்; பகவானுடைய சேவையில் பக்தர்களை ஈடுபடுத்துபவர்; எங்களை போன்ற வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிக்க வல்லவர்; எல்லா புகழும் உங்களுக்கே! தேவியே , மூவுலகங்களையும் காப்பதற்காக, தாங்கள் பல விதங்களில் காட்சி தருகிறீர்கள் - அம்பிகா, ப்ராஹ்மி, வைஷ்ணவி, மகேஸ்வரி, வராஹி மகா லட்சுமி, நரசிம்ஹி, இந்திரி, குமாரி, சண்டிகை, லட்சுமி, சாவித்ரி, சந்திரகலா, ரோகினி, பரமேஸ்வரி. எல்லையற்ற புகழுடைய உங்களுக்கு எல்லா புகழும் உரித்தாகுக! என் மீது கருணை காட்டுங்கள்".

இந்த பிரார்த்தனையை கேட்ட மஹாலக்ஷ்மி தேவி மிகவும் மகிழ்ந்தார். பின்னர் இளவரசரிடம், "உன்னுடைய பிரார்த்தனையால் நான் மிகவும் மகிழ்வுற்றேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்று கூறினார்.

இளவரசர், "மூவுலகங்களின் அன்னையே, என்னுடைய தந்தையான ப்ரஹத்ரதி, அஸ்வமேத யாகத்தை செய்துகொண்டிருக்கும் பொது தீடீரென்று இறந்து விட்டார். அவர் பாதியில் விட்டு சென்ற யாகத்தை நான் முடிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் அதற்குள் உலகம் முழுவதும் சுற்றி வந்து புனிதப்படுத்திய யாகத்திற்கான அஸ்வதை (குதிரையை ) யாரோ திருடி விட்டார்கள். குதிரையை தேடும்படி எனது வீரர்களுக்கு உத்தரவிட்டேன். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் தான் நான் உங்களின் உதவியை நாடி வந்துள்ளேன். எனது பிரார்த்தனையால் நீங்கள் மகிழ்வுற்றது உண்மையென்றால், எனது குதிரையை நான் எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு கூறுங்கள். நான் யாகத்தை நல்லபடியாக முடித்து எனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள்" என்று கூறினார்.

மஹாலக்ஷ்மி, "இந்த ஆலயத்தின் வாயிலில் ஒரு உயர்ந்த பிராமணர் இருக்கிறார். அவர் பெயர், சித்த சமாதி. அவர் உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவார்" என்று கூறினார்.

மஹாலக்ஷ்மியின் பதிலை கேட்ட இளவரசர், உடனடியாக அந்த பிராமணரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். அவர் முன் கைகூப்பி நின்ற இளவரசரை பார்த்த பிராமணர், "தாய் மஹாலக்ஷ்மி உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார். ஆகையால் நான் உன்னுடைய ஆசையை நிறைவேற்றுகிறேன்" என்று கூறினார்.

பிராமணர் சில மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அணைத்து தேவர்களும் அவர் முன் தோன்றினர். தேவர்கள் அனைவரும் சித்த சமாதி முன் நின்று அவருடைய ஆணைக்காக காத்திருப்பதை பார்த்த இளவரசருக்கு ஒரே ஆச்சர்யம். சித்த சமாதி பேச துவங்கினார். "தேவர்களே, அஸ்வமேத யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த இந்த இளவரசருடைய குதிரையை நேற்று இரவு இந்திரர் திருடி சென்றுவிட்டார். நீங்கள் அனைவரும் சென்று அந்த குதிரையை திரும்ப கொண்டு வாருங்கள்" என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தேவர்கள் குதிரையுடன் வந்து, அதை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள். மிகவும் ஆச்சரியமடைந்த இளவரசர், சித்த சமாதியின் பாதங்களில் விழுந்து, "இதனை சக்தி பெற்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததேயில்லை. பிராமணரே, என்னுடைய வேண்டுதலை கேளுங்கள். அஸ்வமேத யாகத்தின்போது தீடீரென்று என் தந்தை இறந்து விட்டார். நான் அவரது சடலத்தை பாதுகாத்து வைத்துள்ளேன். நீங்கள் விருப்பப்பட்டால், அவருக்கு மீண்டும் உயிரளியுங்கள்" என்று கூறினார்.

சித்த சமாதி உடனே, "சரி, உன் தந்தையின் சடலம் இருக்கும் இடத்திற்கு நாம் செல்வோம்" என்று கூறினார். அவ்விடத்தை அடைந்ததும், சிறிது நீரை கரத்தில் ஏந்தியவாறு சித்த சமாதி சில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, நீரை அரசரின் சடலத்தில் தெளித்தார். நீர் உடலில் பட்டதும் அரசர் உடனே உயிர்பெற்று எழுந்தார். சித்த சமாதியிடம், "நீங்கள் யார் ?" என்று வினவினார். உடனே இளவரசர் நடந்தவை அனைத்தையும் கூறினார். இதை கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்த அரசர், சித்தசமாதியின் பாதங்களில் விழுந்து வணங்கி, இவ்வளவு சக்தி கிடைக்குமளவிற்கு தாங்கள் என்ன தவம் செய்தீர்கள்? என்று வினவினார். சித்த சமாதி, " நான் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை படித்து வருகிறேன்" என்று கூறினார்.
இதை கேட்ட அரசரும் இளவரசரும், அந்த பிராமணரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை கற்றார்கள். தினமும் அதை படித்து வந்த அவர்கள், சிறிது காலத்தில் பகவான் கிருஷ்ணரின் தாமரை திருவடிகளை வந்தடைந்தார்கள். அவர்கள் மட்டுமல்லாது மேலும் பலரும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை படிப்பதன் மூலமாக வாழ்வின் உன்னத குறிக்கோளான பகவானின் திருப்பாதங்களை சென்றடைந்தார்கள்

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...